மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதா? சர்ச்சை கிளப்பிய புகைப்படம்

அரசியல் சமூக ஊடகம் தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிக வேகமாக கட்டப்பட்ட மருத்துவமனை படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடி ஆட்சியில் மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை” என்று குறிப்பிட்டு “பாரத் மாதாகி ஜே, மோடி த மாஸ்” என்று ஹேஷ் டேக் செய்துள்ளனர்.

இந்த பதிவை தமிழகம் காப்போம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சந்தோஷ் என்பவர் 2020 பிப்ரவரி 3ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், மருத்துவமனை கட்டுவதற்கான முழு நிதி ஒதுக்கீடும் நடக்கவில்லை. முதல் கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்போதுதான் நிலத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் இந்த மருத்துவமனையை கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

vikatan.comArchived Link 1
maalaimalar.comArchived Link 2

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக மருத்துவமனை ஒன்றை 8 நாளில் கட்டி முடித்துள்ளது சீனா. இது தொடர்பான படங்கள் பல செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தை எடுத்து மதுரையில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை என்று சமூக ஊடகங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

livemint.comArchived Link 1
financialexpress.comArchived Link 2

இது சீனாவில் உள்ள மருத்துவமனை என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது ஏ.பி செய்தி நிறுவனம் இந்த படத்தை எடுத்தது தொடர்பாக பல ஆதாரங்கள் கிடைத்தன. 

நம்முடைய ஆய்வில்,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கான அடிப்படை பணிகளே இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி கிடைத்துள்ளது.

இந்த புகைப்படம் சீனாவில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க 10 நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை புகைப்படத்தை வெளியிட்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதா? சர்ச்சை கிளப்பிய புகைப்படம்

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •