குங்கும பொட்டு வைத்திருந்த மு.க.ஸ்டாலின்!

அரசியல் சமூக ஊடகம்

‘’மு.க.ஸ்டாலின் குங்கும பொட்டு வைத்திருந்தார்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இது பார்ப்பதற்கு சந்தேகமாக இருந்ததால், இதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

DMK Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஸ்டாலின் குங்கும பொட்டு வைத்திருப்பது உண்மையான என்ற சந்தேகத்தில் ஃபேஸ்புக்கில் இதுதொடர்பாக வேறு ஏதேனும் பதிவு வெளியாகியுள்ளதா, என தேடிப் பார்த்தோம். அப்போது, ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தி ஒன்றின் இணைப்பு கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\mk stalin 2.png

இதன்பேரில், ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியை கிளிக் செய்து பார்த்தோம். அதில், ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற விழாவில், நெற்றியில் குங்கும பொட்டுடன் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாகக் கூறப்பட்டிருந்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, குறிப்பிட்ட வீடியோவை முதலில் பதிவேற்றம் செய்ததே திமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடிதான் என்ற விவரமும் கிடைத்தது. அந்த வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

இந்த வீடியோவில், மு.க.ஸ்டாலின் குங்கும பொட்டு வைத்து பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர், எதற்காக, பொட்டு வைத்தார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இருந்தபோதிலும், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் உண்மைதான், என தெரியவருகிறது.

C:\Users\parthiban\Desktop\mk stalin 3.png

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான ஒன்றுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசியல் சார்ந்த நிகழ்வு என்பதால், பலராலும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதாக, தெரிகிறது.

Avatar

Title:குங்கும பொட்டு வைத்திருந்த மு.க.ஸ்டாலின்!

Fact Check By: Parthiban S 

Result: True