
‘’பினராயி விஜயன் மானஸ்தன், இங்கேயும் சில மானங்கெட்ட ஜென்மங்கள் இருக்கானுங்களே,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தகவலின் விவரம்:

அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 29ம் தேதி வெளியிட்டுள்ளது. பினராயி விஜயன் புகைப்படத்தையும், ரஜினி நடித்த மன்னன் படக் காட்சிகளையும் இணைத்து, ‘’மோடி பதவியேற்பு விழாவில் பினராயி விஜயன் கலந்துகொள்ளவில்லை, ரஜினி மட்டும் கலந்துகொள்கிறார். மானங்கெட்ட ஜென்மம்,’’ என்று கூறியுள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. மோடி 2வது முறையாக பதவியேற்றார்.
இந்த நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இந்நிகழ்ச்சியில், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த விஐபிகளும் பங்கேற்றனர். அதேசமயம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கர்நாடகா முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட சிலர் பங்கேற்கவில்லை. அவர்கள் இதுபற்றி மறுப்பு தெரிவித்தும் இருந்தனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதேசமயம், தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டிருந்தார்.
இதனை குறிப்பிட்டுத்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், சிலர் மானஸ்தர்கள், ரஜினி போன்றவர்களுக்கு மானம் இல்லை என்று விமர்சித்துள்ளனர். விமர்சிப்பது அவரவர் உரிமை. இருந்தாலும், வார்த்தைகளில் சற்று கவனம் தேவை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு உண்மையான தகவலாக இருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள, ரஜினி மானஸ்தனா, இல்லையா என்ற வார்த்தைகள், சர்ச்சை ஏற்படுத்துவதாக உள்ளன. எனவே, இதன் நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதில், பாதி உண்மை, பாதி சர்ச்சைக்குரிய தகவல் இருப்பதாக, முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி சர்ச்சைக்குரிய தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய சர்ச்சைக்குரிய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பினராயி விஜயன் மானஸ்தன்; ரஜினி மானங்கெட்ட ஜென்மம்: ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: Mixture
