‘’எடப்பாடி பழனிசாமியை காப்பி அடித்து மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் பற்றி உண்மை அறிய இதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது பல ஆண்டுகளாகவே இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவதாக, தெரிந்தது.

இதன்படி, கடந்த 2015ம் ஆண்டில் அப்போதைய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, டீக்கடையில் டீ சாப்பிடுவது, வயலில் இறங்கி விவசாயம் செய்வது, டிராக்டர் ஓட்டுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்தார். அப்போது எடுத்த புகைப்படங்களில் ஒன்றுதான் நாம் ஆய்வு செய்யும் புகைப்படமும்.

One India Tamil Link Archived Link

இதுதொடர்பான புகைப்படங்களை நமக்கு நாமே என்ற பெயரில் கூகுளில் காண முடியும். மேலும், மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இதுபோன்ற நிறைய புகைப்படங்கள் உள்ளன.

குறிப்பாக, ஸ்டாலினின் அருகில் நிற்பவரை வைத்து இந்த புகைப்படம் பழையதுதான் என்று நிரூபிக்க முடியும்.

இதே நபர்தான், ஆனந்த விகடன் வெளியிட்ட நமக்கு நாமே பற்றிய மற்றொரு செய்தியின் புகைப்படத்திலும் ஸ்டாலின் அருகில் காணப்படுகிறார். மேலும், இந்த புகைப்படம் தஞ்சாவூர் அருகே உள்ள கண்டியூர் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

Vikatan News Link Archived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்பட பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மு.க.ஸ்டாலினின் பழைய புகைப்படத்தை புதியதுபோல பகிர்ந்துள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எடப்பாடி பழனிசாமியை பின்பற்றி மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False