அரேபியர் உடையில் மோடி: ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவும் புகைப்படம்

அரசியல் சமூக ஊடகம்

பிரதமர் மோடி அரபு நாட்டு உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Modi 2.png

Facebook Link I Archived Link

பிரதமர் மோடி நடந்து செல்கிறார். தலையில் அரேபியர்கள் அணிவது போன்ற துணி அணிந்திருக்கிறார். அதை வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். அருகில் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் நடந்து வருகின்றனர்.

நிலைத் தகவலில், “அங்கே போனா அந்த வேடம் இங்கே வந்தா காவி வேடம் இவரின் நடிப்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Mylai Kamarudeen என்பவர் 2019 ஆகஸ்ட் 24ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆகஸ்ட் 24ம் தேதி பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பும் வழியில் அபுதாபி, பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது அபுதாபியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பது போல இருந்தது.படம் பார்க்க உண்மையானதுபோல இல்லை. அரபு தலைப்பாகை மார்ஃபிங் செய்து வைக்கப்பட்டது போல இருந்தது. எனவே, இதன் அசல் படம் இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடினோம். இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

Modi 3.png

அப்போது, இந்த படத்தை தி இந்து, என்.டி.டி.வி உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் வெளியிட்டது தெரிந்தது. அதில், பிரதமர் மோடி தலையில் எதையும் அணிந்திருக்கவில்லை. தொடர்ந்து தேடியபோது பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தைப் பதிவிட்டிருந்தது தெரிந்தது.

Archived Link

பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த படத்தை எடுத்து, அரேபியர்கள் தலைக்கு அணிவது போன்ற ஆடையை மார்ஃபிங் முறையில் சேர்த்து வெளிநாட்டில் நடிக்கிறார் என்று தவறான தகவலை பரப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அரேபியர் உடையில் மோடி: ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவும் புகைப்படம்

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •