மக்களவை தேர்தல் முடிவுகளை அடுத்து, "விவசாயிகளின் நன்மை கருதி, உடனடியாக, தேசிய நதிகளை காவிரியுடன் இணைத்து, தமிழகம் செழிக்க பாடுபடுவேன்,’’ என்று இந்தியா டுடே டிவியில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, கண்ணீர் மல்க பேசியதாக, சில ஃபேஸ்புக் வதந்திகளை பார்க்க நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.

வதந்தியின் விவரம்:

C:-Users-parthiban-Desktop-nitin 2.png

Archived Link

C:-Users-parthiban-Desktop-nitin 3.png

Archived Link

மேற்கண்ட 2 ஃபேஸ்புக் பதிவுகளிலுமே ஒரே விசயத்தைத்தான் கூறியுள்ளனர். அதன் விவரம் கீழே வருமாறு:

***நேற்று திரு. நிதின் கட்கரி*, இந்தியா டுடே தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார்..

இரண்டாம் முறை பெருவெற்றி பெற்ற பிஜேபி, நாட்டிற்கு தங்களின் மூலமாய் அடுத்து செய்யப்போவது என்ன ? என்று ராகுல்கன்வல் கேட்க, கண்களில் நீர் ததும்பியபடி, திரு. கட்கரி சொன்னது என்ன தெரியுமா ??

?????

" .. எங்களது முதல் ஆட்சி காலத்தில், தேசம் முழுதும் நெடுஞ்சாலைகளை இணைத்து தேசம் அனைவருக்கும் ஒன்று காட்டினோம். இந்த 5 ஆண்டு காலத்தில், எப்படியேனும், *நதிகளை தேசியமயமாக்கி, கங்கா- கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்தால், காவிரியும் இணையும்.. இதனால், தேசம் மட்டுமின்றி, குறிப்பாக தமிழ்நாட்டின் நெடு நாளைய நீர் பிரச்சனை தீர்ந்து, விவசாயமும், நீர் வளமும் செழித்து, தமிழர்கள் நிரந்தர பயன் பெறுவார்கள்.."* என்றார்...

இதை சொல்லி முடிக்கும் போது, அவரது கண்ணில் இருந்து, ஒருதுளி நீர் மண்ணில் விழுந்தது..

இதை பார்த்த என்னால், எனது கண்ணீரை அடக்காமல் இருக்க முடியவில்லை...

*"நட்டுகிட்டு சாகலாம்டா.. தமிழர்களா..தூ..தூ.."* மானங்கெட்டதமிழ் துரோகிகளா....
"இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யக்கால்...."பாரத் மாதாகி ஜே***

உண்மை அறிவோம்:
நிதின் கட்கரி, 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, இந்தியா டுடேவுக்குப் பேட்டி அளித்தார். அதில், ராகுல் கன்வலின் கேள்விக்கு, கண்ணீர் மல்க, தேசிய நதிகளை இணைத்து, தமிழக விவசாயிகளை பாதுகாப்போம், என்று கூறினார். இதைத்தான் சுற்றி சுற்றி, பல வதந்திகளை மேலும் சேர்த்து, இவர்கள் 2 பேரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இதைப் பதிவிட்டது மட்டுமின்றி, தமிழர்களை தரக்குறைவாகவும் விமர்சித்துள்ளனர்.

சரி, இவர்கள் சொன்னது போல, முதலில் நிதின் கட்கரி, இந்தியா டுடே டிவிக்கு, மே 23ம் தேதி எதுவும் பேட்டி அளித்தாரா என தேடிப் பார்த்தோம்.

C:-Users-parthiban-Desktop-nitin 4.png

இதன்படி, நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நிதின் கட்கரி வெற்றி பெற்றுள்ளார். அதுபற்றி இந்தியா டுடே சேனலுக்கு, ராகுல் கன்வாலிடம் நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளார். இது மே 23ம் தேதி வெளியிடப்பட்ட செய்திதான். வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் 1.09வது நிமிடத்தில் நிதின் கட்கரி பேசத் தொடங்குகிறார். அதில், தன்னை வெற்றி பெற வைத்த நாக்பூர் மக்களுக்குத்தான் நன்றி தெரிவித்து நிதின் கட்கரி பேசுகிறாரே தவிர, எந்த இடத்திலும் நதிகளை இணைப்பேன், தமிழகத்தை வளப்படுத்துவேன் என்று கண்ணீர் வழிய அவர் சென்டிமெண்டாகப் பேசவில்லை.

C:-Users-parthiban-Desktop-nitin 5.png

இதுபோக, ராகுல் கன்வாலுக்கு வேறு எங்கேனும் நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, மே 24ம் தேதி இந்தியா டுடே சேனலுக்காக ஒரு நேர்முக காணலை அவர் அளித்துள்ளார். அந்த வீடியோ விவரம் கீழே தரப்பட்டுள்ளது. ஆனால், இதிலும் அப்படி அவர் காவிரியை மற்ற நதிகளுடன் இணைத்து அதனை தமிழக விவசாயிகளுக்காக அனுப்புவேன் என்று எதுவும் கூறவில்லை.

மேலும், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளில் மே 23ம் தேதியன்று நிதின் கட்கரி கண்ணீர் மல்க பேட்டி அளித்ததாகவே குறிப்பிடுகின்றனர். எனவே, மேற்கண்ட வீடியோவை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இதையடுத்து, நதிநீர் இணைப்பு பற்றி, இந்தியா டுடே டிவியில் நிதின் கட்கரி எதாவது பேசியுள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியா டுடே ஊடகத்தின் ஆண்டு விழாவின்போது, நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பேசிய வீடியோ ஆதாரம் கிடைத்தது.

எனினும், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நிதின் கட்கரி அறிவிப்பு வெளியிட்டதாகவே குறிப்பிடுகின்றனர். எனவே, இந்த வீடியோவையும் நாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது.

இதற்கு மேல் வேறு எங்கேனும் நதிநீர் இணைப்பு பற்றி பேசியிருக்கிறாரா என தேடிப் பார்த்தோம். 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா டுடே ஊடகத்தின் ஆண்டு விழாவில் நிதின் கட்கரி பேசிய வீடியோ விவரம் கிடைத்தது. ஆனால், அது பழைய வீடியோ. அத்துடன் அதில் கட்கரியை பேட்டி எடுப்பவரின் பெயர் ராஜ்தீப் சர்தேசாய். நாம் குறிப்பிடும் ஃபேஸ்புக் பதிவில் உள்ளதன் படி பார்த்தால், இந்த வீடியோவும் நமக்கு கணக்கில் வராது.

நமக்கு முதலில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்த செய்தி தவறானது என்று நாம் ரேட்டிங் அளித்திருந்தோம். பிறகு, நமது வாசகர் கொடுத்த ஆதாரத்தை ஆய்வு செய்த பின், அதில் நிதின் கட்கரி பேசியது உண்மைதான் என்று
தெரியவந்தது. இதையடுத்து, நாம் கொடுத்திருந்த ரேட்டிங்கை 'உண்மை' என மாற்றிக் கொண்டோம்.

முடிவு:

நமது வாசகர்கள் இத்தகைய சர்ச்சையான செய்திகளை உரிய ஆதாரமின்றி பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.