மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக இந்திய அரசு அறிவித்ததா?
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக, இந்திய அரசு அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தனர். இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இந்த வதந்தி கடந்த பல மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. ஆனால், இதில் உண்மையில்லை. இந்திய அரசு இவ்வாறான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இதுபற்றி இந்திய அரசின் PIB FactCheck மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக இந்திய அரசு அறிவித்ததா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False