முதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்; வீடியோ செய்தி உண்மையா?

சமூக ஊடகம்

‘’ரோட்டில் சென்ற முதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோ செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\peryarists 2.png

Facebook Link I Archived Link

Hindu Munnani Jaikarthick என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முதியவர் ஒருவர் கூட்டத்தினருடன் நடனமாட மற்றவர்கள் அதனை உற்சாகப்படுத்தி கைதட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பதிவிட்ட நபரோ, ‘’தனியாக ரோட்டில் சென்ற முதியோரை இழுத்து மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள், இதை பற்றி விவாதிக்க தயாரா? #தமிழ்நாடுவேசிஊடகங்கள்,’’ என்று பதிவிட்டுள்ளனர். பலரும் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோ மிகச் சொற்பமான நொடிகளே ஓடுகிறது. இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் கூறப்படவில்லை. ஆனால், வீடியோவை திரும்ப திரும்ப பார்த்தபோது, அதன் இடது ஓரம் கீழே, ‘’கறுப்பர் கூட்டம்’’ என்ற லோகா இருந்ததை காண நேரிட்டது.

C:\Users\parthiban\Desktop\peryarists 3.png

இதன்படி, ஃபேஸ்புக்கில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் எதுவும் ஐடி உள்ளதா என தேடிப் பார்த்தோம். அப்போது, அதன் பெயரில் ஒரு ஐடி இருப்பது உண்மைதான் என தெரியவந்தது.

C:\Users\parthiban\Desktop\peryarists 4.png

இதன்படி, ஜூன் 24, 2019 அன்று அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தனர். அதில்தான், இந்த வயதான பெரியவர் நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

C:\Users\parthiban\Desktop\peryarists 5.png

Facebook Link

மேற்கண்ட பதிவிலேயே அவர்கள் வெளியிட்ட யூ டியூப் வீடியோ ஒன்றின் லிங்கையும் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில்தான், குறிப்பிட்ட முதியவர் நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவரை யாரும் மிரட்டி ஆட வைக்கவில்லை. அவரே, தன்னார்வத்துடன் முன்வந்து நடனமாடுகிறார். வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பற்றி பலரும் விமர்சித்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட கறுப்பர் கூட்டம் ஃபேஸ்புக் பக்கத்திலேயே, இதற்கு விளக்கம் தரப்பட்டு மற்றொரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 26, 2019 அன்று வெளியிடப்பட்டுள்ள விளக்கப் பதிவில், யாரும் கட்டாயப்படுத்தி அந்த பிராமண முதியவரை ஆட சொல்லவில்லை என்றும், அவர்தான் ஆர்வத்துடன் முன்வந்து அப்படி செய்தார் என்றும், சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

C:\Users\parthiban\Desktop\peryarists 6.png

Facebook Link

எனவே, வீடியோ எடுத்தவர்களே இதுபற்றி உரிய விளக்கம் அளித்துவிட்டதால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்ட தகவல் தவறு என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:முதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்; வீடியோ செய்தி உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: False