இந்த நாய் தனது உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியதா?

உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’தனது உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய நாய்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில் முகம் சிதைந்த நிலையில் உள்ள நாய் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, இந்த நாய் தனது உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியபோது, இவ்வாறு காயமடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த புகைப்படம் உண்மையான என்ற சந்தேகத்தில் தகவல் தேடியபோது, இதுகுறித்த விவரங்கள் கிடைத்தன. அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள கோலின்ஸ்வில்லே பகுதியில்தான் இந்த நாய் பிடிபட்டுள்ளது. பராமரிப்பாளர்கள் யாரும் இன்றி சாலையோரம் திரிந்த இதன் பரிதாப நிலை கண்டு இரக்கப்பட்ட skiatookpawsandclaws அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீட்டு, Family Animal Medicine வசம் ஒப்படைத்துள்ளனர். தற்போது இந்த நிறுவனம்தான் நாய்க்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறது. யாரேனும் தத்தெடுக்க விரும்பினால் தங்களை தொடர்புகொள்ளும்படி, அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாய் பிடிபட்டது முதலாக, அதனை அன்றாடம் பரிசோதித்து வரும் கால்நடை மருத்துவர்கள், அதன் விசித்திர முகத் தோற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். ஒருவேளை யாரும் காயப்படுத்தினார்களா அல்லது ஏதேனும் நோய்த்தொற்று காரணமா என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.   

Ktul.com News Link Petrescuereport.com Link 

குறிப்பிட்ட நாய்க்கு Phoenix எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் அன்றாட செயல்பாடுகள் பற்றி தகவல் பகிர்வதற்காக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் தனி ஐடி கூட தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பீனிக்ஸ் நாய்க்கு தேவையான நிதி திரட்டலும் நடைபெறுகிறது. 

Phoenixthedawg Instagram Page Link
Family Animal Medicine Facebook Page Link
Skiatook Paws & Claws Animal Rescue FB Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) குறிப்பிட்ட நாய் அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் பிடிபட்டுள்ளது.
2) இந்த நாயின் விசித்திர முகத்தோற்றத்திற்கு என்ன காரணம் என்று மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. ஆனால், இது தீ விபத்தில் சிக்கிய அதன் உரிமையாளரை காப்பாற்றியதாகக் கூறப்படும் தகவல் தவறு.
3) தெருவோரம் பராமரிப்பின்றி திரிந்த நாய், தற்போது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இந்த நாய் தனது உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False