கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இதுபோன்ற உணவு தரப்படுகிறதா?
‘’கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தரப்படும் ஆரோக்கியமான உணவு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் பற்றிய தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் இதுபற்றிய விவரம் தேடினோம். இந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதுபற்றிய சில செய்தி விவரங்கள் கிடைத்தன.
இதன்படி, ஆந்திரா மாநிலம், நுஸ்விட் மற்றும் விஜயவாடா பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றன. இந்த முகாம்களில் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு, வாழை போன்ற பழ வகைகள், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா போன்ற உலர் பழ வகைகள், முட்டை உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகின்றன.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உத்தரவுப்படி மாநிலம் முழுக்க உள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இந்த மெனு உணவாக தரப்படுவதாக, தெரியவந்தது.
ஆந்திராவில் சில நாட்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து, கேரள அரசுக்குச் சாதகமாக சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் தவறான தகவல் பரப்பி வருவதாக சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள உணவு வகைகள் விநியோகிக்கப்படுவது ஆந்திராவில்; கேரளாவில் அல்ல என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இதுபோன்ற உணவு தரப்படுகிறதா?
Fact Check By: Pankaj IyerResult: False