இன்று ஐந்து பாதிரியார்கள் ஒரே நேரத்தில் பாவ மன்னிப்பு வழங்கிய தினம் என்று ஐந்து 6 பாதிரியார்கள் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்கள் இவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

KERALA 2.png

Facebook Link I Archived Link

பெண் ஒருவரின் படமும் அதைத் தொடர்ந்து ஐந்து பாதிரியார்கள் நிற்கும் படத்தையும் வைத்துள்ளனர். இவற்றின் கீழ், பிரபல பாதிரியார் எஸ்ரா சற்குணம் படத்தை வைத்துள்ளனர். இந்த படத்தின் மீது, “பாவத்தோடு வாங்க... பாப்பாவோடு போங்க” என்று எழுதியுள்ளனர்.

நிலைத் தகவலில், “இன்று 5 கேரள பாவாடைகள் ஒரே நேரத்தில் பாவமன்னிப்பு வழங்கிய தினம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, முத்து கிருஷ்ணன் என்பவர் ஜூன் 30, 2019 அன்று வெளியிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை, உண்மையை வெளியே கூறிவிடுவேன் என்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐந்து பாதிரியார்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஐந்து பாதிரியார்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது சர்ச் நிர்வாகம். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ ஆலயங்களில் பாவமன்னிப்பு முறையை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. "மத நம்பிக்கைகள் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக செல்லும்பட்சத்தில் அதில் நிச்சயம் மாற்றம் தேவை. பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்" என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ரேகா சர்மா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த சம்பவம் வெளிவந்து ஓராண்டு ஆன நிலையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர். ஆனால், அதில் ஒரு பெண் மற்றும் ஆறு பாதிரியார்களின் படத்தை வைத்திருந்தனர். பார்க்க பாலியல் குற்றம்சாட்டிய பெண் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்கள் போல இருந்தது.

அந்த பெண்ணின் படத்தை yandex.com இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, படத்தில் இருப்பவர் டாக்டர் அஞ்சு ராமச்சந்திரன் என்ற இந்து பெண் என்று தெரிந்தது. பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண் என்று சமூக ஊடகங்களில் டாக்டர் அஞ்சுவின் படத்தை தவறாக பகிரப்பட்டதும், அது தொடர்பாக டாக்டர் அஞ்சு போலீசில் புகார் செய்த தகவலும் நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் அந்த பெண்ணின் படம் போலியானது என்று உறுதியானது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலே குறிப்பிட்ட, புதிய தலைமுறை செய்தியில் நான்கு பாதிரியார்களின் படம் இருந்தது. ஐந்தாவது பாதிரியாரின் படத்தை அவர்கள் வெளியிடவில்லை. அதே நேரத்தில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளவர்களும் அந்த படத்திலிருந்தவர்களும் வேறாக இருந்தனர். அதனால், அந்த படத்தில் உள்ள பாதிரியார்கள் யார் என்று ஆய்வு மேற்கொண்டோம்.

KERALA 3.png

அவர்கள் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த படம் பற்றிய தகவல் நமக்குக் கிடைத்தது. இந்த படம் 2013ம் ஆண்டு எடுக்கப்பட்டது. படத்தில் இருப்பவர்கள் பாலியல் குற்றவாளிகள் இல்லை என்பது தெரிந்தது. படத்தில், மும்பையில் உள்ள ஒரு தேவாலயத்தின் அதிபராக இருந்த Msgr Nereus Rodrigues, Bishop John Rodrigues, Oswald Cardinal Gracias, Archbishop Salvatore pennacchio, Bishop Dominic fernandes, Fr Aniceto Pereira என தெரிந்தது. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

KERALA 4.png

அதேபோல், கீழே இருந்த தமிழகத்தில் ஈ.சி.ஐ என்ற கிறிஸ்தவ சர்ச்சை நடத்தி வரும் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

KERALA 5.png

பாலியல் குற்றச்சாட்டில் தொடர்பில்லாத பெண், பாதிரியார்கள் புகைப்படத்தை வெளியட்டு, “இன்று 5 கேரள பாவாடைகள் ஒரே நேரத்தில் பாவமன்னிப்பு வழங்கிய தினம்” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தவறான படத்தை பரப்பியிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.Result: False

Avatar

Title:ஃபேஸ்புக்கில் பரவும் பாலியல் குற்றம்சாட்டப் பாதிரியார்கள் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False