பிரதமர் மோடி கொரோனாவைப் பரப்பும் வகையில் கூட்டமாக சென்றார் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

மோடி கார் ஒன்றில் மக்கள் திரளுக்கு நடுவே செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கொரனாவை நமது பிரதமர் மோடியே தலைமையேற்று பரப்பி செல்லும் காட்சி. புல்லரிக்குது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை Sumathy Anbarasu என்வர் 2020 ஆகஸ்ட் 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த வீடியோ இரவு நேரத்தில் எடுக்கப்பட்டது போல இருந்தது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக விழாவுக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில், மோடி ஊர்வலம் என்றார் என்பது தவறான தவலாக இருந்தது.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை பலரும் கடந்த ஆண்டு மே மாதம் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

மேலும் சிலர், இதே வீடியோவை பகிர்ந்து, கொரோனா பாதிப்பு இல்லை என்றால் அயோத்தியில் இப்படி ஒரு ஊர்வலம் நடந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link 1Facebook LinkArchived Link 2

கொரோனா பாதிப்பு என்பது 2020 ஜனவரியில் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா பரவல் மார்ச் முதல் வாத்தில் ஏற்பட்டது. அதற்கும் முன்பாக 2020 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருந்தது. எனவே, கொரோனாவை பரப்பும் வகையில் மோடி ஊர்வலம் சென்றார் என்பது தவறானது என்பது உறுதியானது.

Youtube Link

இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். நீண்ட தேடலுக்குப் பிறகு இது பிரதமர் மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் நடத்திய ரோட்ஷோ நிகழ்ச்சியின் போது எடுத்தது என்று தெரிந்தது.

தூர்தர்ஷன் வெளியிட்டிருந்த யூடியூப் வீடியோவில் மோடியின் கார் முழுக்க ரோஜா மலர் இதழ்களால் நிரப்பியிருக்கும் காட்சி இருந்தது. எனவே, இது 2019 ஏப்ரலில் வாரணாசியில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பிரதமர் மோடி கொரோனா பரப்பிய வீடியோ காட்சி என பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கொரோனா பரப்பும் வகையில் மோடி ஊர்வலம் சென்றாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False