
‘’பாஜகவில் இருந்து வெளியேறுவேன் – பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
Manickam Palaniyapan என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பாஜகவிலிருந்து வெளியேறுவேன், என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாக எழுதியுள்ளனர். இது உண்மை என நினைத்து பலர் வைரலாக ஷேர் செய்ய, சிலர் இது உண்மையா என்றும் சந்தேகம் எழுப்பியதை காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட் பகுதியிலேயே இதற்கான பதில் தெளிவாக உள்ளது. ஆம், மேற்கண்ட பதிவில் உள்ள கன்டென்டை வைத்து, பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என பலரது பெயரில் போலி நியூஸ் கார்டு தயாரித்து பகிர்ந்திருந்தனர். இதை வைத்துப் பார்க்கும்போது, ஒரே குட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட போலியான நியூஸ் கார்டுதான் நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ள நியூஸ் கார்டு என தெளிவானது.

நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டில் பொன். ராதாகிருஷ்ணன் என்பதை, பொன்.ராதா என சுருக்கி எழுதியுள்ளனர். இப்படி எந்த ஊடகமும் செய்தி வெளியிட வாய்ப்பில்லை. மேலும், இதனை fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் இது போலிதான் என்ற நம் சந்தேகம் உறுதியானது.

இறுதியாக, இதுபற்றி தந்தி டிவி ஆசிரியர் குழுவில் பணிபுரியும் நமது நண்பரிடம் விசாரித்தோம். அவர், ‘’இப்படி எந்த செய்தியும் தந்தி டிவி வெளியிடவில்லை. இது போலியான செய்தி,’’ என்றார்.
இதேபோல மற்றொரு ஃபேஸ்புக் பதிவையும் காண நேரிட்டது. அதுவும் போலியான செய்திதான்.

Facebook Claim Link | Archived Link |
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் போலியான நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
