பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இன்றி சென்ற பிரியங்கா சோப்ரா: குட்டையை குழப்பும் இணையதள செய்தி

சமூக ஊடகம் சினிமா

‘’பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இன்றி கணவருடன் சென்ற பிரியங்கா சோப்ரா,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு இணையதள செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இல்லாமல் தனது கணவருடன் சென்ற பிரியங்கா சோப்ரா.!

Behind Talkies என்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இணையதளத்தில் வெளியிட்ட இச்செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தும் உள்ளனர். அதனால், நம் கவனத்திற்கு இது காண கிடைத்தது. செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

இதே செய்தியை Madras memes என்ற ஃபேஸ்புக் பக்கமும் பகிர்ந்துள்ளது.

C:\Users\parthiban\Desktop\priyanka chopra 2.png

Archived Link

இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், சில்மிஷ செய்தியாக உள்ளது.

உண்மை அறிவோம்:
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில், நிக் ஜோனஸ் என்ற தன்னைவிட 10 வயது குறைந்த நபரை திருமணம் செய்துகொண்டார்.

C:\Users\parthiban\Desktop\priyanka chopra 3.png

இந்நிலையில்தான், நாம் ஆய்வு செய்யும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் தலைப்பில், உள்ளாடை இன்றி வெளியே வந்த பிரியங்கா சோப்ரா எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், செய்தியின் உள்ளே அப்படி எந்த விசயத்தையும் குறிப்பிடவில்லை. இதன்படி, பரபரப்பிற்காக இப்படி தலைப்பிட்டு செய்தியை பகிர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

C:\Users\parthiban\Desktop\priyanka chopra 4.png

தலைப்பு ஒரு மாதிரியாகவும், செய்தியின் உள்ளே அவர் படு மோசமாக உடையணிந்து வந்தார் எனவும்தான் குறிப்பிட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த இணையதள செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பொது நிகழ்ச்சிக்கு உள்ளாடை இன்றி சென்ற பிரியங்கா சோப்ரா: குட்டையை குழப்பும் இணையதள செய்தி

Fact Check By: Parthiban S 

Result: False Headline