கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த புனே டாக்டர் மேகா: வைரல் வதந்தி…

Coronavirus சமூக ஊடகம்

‘’கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த புனேவைச் சேர்ந்த பெண் டாக்டர் மேகா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்: 

மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் உண்மையில் யார் என்று அறிந்துகொள்ள முதலில் கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை வைத்து இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இதே தகவல் பகிரப்பட்டு வருவதாக தெரிந்துகொண்டோம். 

Facebook ClaimArchived Link

இதேபோல, ட்விட்டரிலும் பலர் தகவல் பகிர்ந்ததை காண முடிந்தது. அதில், ஒருவர் இதுபற்றி மறுப்பு தெரிவித்து, ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவரின் கணவர் என்று கூறி ஒருவர் முறையிட்டிருந்ததற்கான ஸ்கிரின்ஷாட்டை ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தனர். 

Twitter Evidence LinkArchived Link

இதுதவிர, இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழக்கவில்லை என்று கூறி அவர் சிகிச்சை பெற்ற புனே ஜெஹாங்கிர் ஹாஸ்பிடல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த மருத்துவ சான்றிதழ் புகைப்படமும் கமெண்ட் ஒன்றில் காண நேரிட்டது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம், 

1) இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் மேகா சர்மா. அவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நிமோனியா மற்றும் உடல் உள்ளுறுப்புகள் செயலிழப்பு காரணமாக, புனேவில் உள்ள ஜெஹாங்கிர் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். 

2) அவர் டாக்டரும் இல்லை. சாதாரண இல்லத்தரசிதான் என்று அவரது கணவரே விளக்கம் அளித்துள்ளார். 


3) மேலும், சமூக ஊடகங்களில் தனது மனைவி பற்றி பரவும் வதந்திகள் குறித்து போலீசில் புகார் செய்யப் போவதாக, அவரது கணவரே சமூக ஊடகம் வாயிலாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

இதுபோன்ற வதந்திகளின் உண்மைத்தன்மை பற்றி அறிய விரும்பினால், [email protected] என்ற இமெயில் முகவரி அல்லது 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவோ எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் மேற்கொண்ட ஆய்வில், ‘குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் டாக்டர் இல்லை, அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை,’ என்றும் தெளிவாகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த புனே டாக்டர் மேகா: வைரல் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False