ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா?

சமூக வலைதளம் வர்த்தகம்

‘’ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும்,’’ என்று ரிசர்வ் வங்கி சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 

தகவல் களஞ்சியம் எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏடிஎம் இயந்திரங்களில் தகவல் திருட்டை தடுப்பதற்காக, ஏடிஎம் கார்டை சொருகும் முன் ஏடிஎம்-ல் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கியே அறிவுறுத்தல் செய்துள்ளதாகவும் எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தகவல் விவரம் தேடினோம். அப்போது, சமீப நாட்களில் இப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரியவந்தது. 

இதையடுத்து வேறு யாரேனும் ஊடகத்தினர் இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது இந்த தகவல் வெகு நாளாகவே பரவி வருவதாகவும், இதில் உண்மைத்தன்மை இல்லை என பலரும் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் ஆதாரம் கிடைத்தது. 

Boomlive News LinkAFP News Link Newsmobile Link Snopes News Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) ரிசர்வ் வங்கி இப்படி எந்த எச்சரிக்கையும் வெளியிடவில்லை.
2) சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இப்படியான வதந்திகளை பரப்புவதை பலர் வாடிக்கையாகவே செய்கின்றனர்.
3) ரிசர்வ் வங்கி பெயரில் இதுபோல நிறைய வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா?

Comments are closed.