சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியவில்லை: ஃபேஸ்புக் விஷமம்

அரசியல் | Politics

‘’சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியாது, அவரை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தி பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\seeman 2.png

Facebook Link I Archived Link

Aashiq என்ற நபர் கடந்த ஜூலை 7, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை பகிர்ந்து, அதனை சீமானுடன் ஒப்பிட்டு, ‘’திருமுருகன் காந்தி, வேல்முருகன், வைகோவை எல்லாம் கைது செய்யும் போலீசாரால், சீமான் அருகில் கூட நெருங்க முடியவில்லை,’’ எனக் கூறியுள்ளார்.

உண்மை அறிவோம்:
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில், உண்மைகளை மறைப்பதும், நினைத்ததை எல்லாம் உண்மை போல பரப்புவதும் பலரது வாடிக்கையாக உள்ளது. அதில் ஒரு சிலர் உச்சக்கட்டமாக, தனக்கு லைக், ஷேர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தெரியாத விசயத்தில் கூட மூக்கை நுழைத்து, அறிவாளி போல எதாவது கமெண்ட் பகிர்வதும், அதனை பலர் உண்மை என நினைத்துக் குழப்பமடைவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

அப்படியான ஒரு ஃபேஸ்புக் பதிவுதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதும். இந்த நபர், ‘சீமான் அருகில் கூட போலீஸ் நெருங்க முடியவில்லை, அவர் போராளி இல்லை, கோமாளி,’ என்றெல்லாம் பேசுவது சீமான் மீது இவருக்கு உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாக உள்ளது.

உண்மையில், சீமான் ஒரு தடவை கூட போலீசாரால் கைது செய்யப்படவே இல்லையா, அல்லது அவர் மீது ஒரு வழக்கு கூட தொடுக்கப்படவில்லையா என ஆய்வு மேற்கொண்டோம்.

இதன்படி, கடந்த 2009-10 காலக்கட்டத்தில் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது.

முதலில், 2009 பிப்ரவரி 22ல் அவர் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 15 நாள் காவலில் அடைக்கப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்பிறகு, 2010ம் ஆண்டில், சென்னையில் நடைபெற்ற மீனவர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி, அப்போதைய திமுக தலைமையிலான அரசு சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதன்படி, 2010 ஜூலை மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத்தண்டனையில் சீமான் தள்ளப்பட்டார். ஆனால், அவரது கைது செல்லாது என மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடவே, 2010 டிசம்பர் மாதம் சீமான் விடுதலை செய்யப்பட்டார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதை குறிப்பிட்டு அவரது கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்த சென்னை உயர்நீதிமன்றம் 2012ல் உத்தரவிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

C:\Users\parthiban\Desktop\seeman 3.png

தேசிய பாதுகாப்புச் சட்டம் எத்தகைய கொடுமையானது என்பது பற்றி விகடன் வெளியிட்ட விரிவான செய்திக் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இது மட்டுமல்ல, இதுபோல நிறைய வழக்குகளில் சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது இன்னமும் சில வழக்குகளில் நீதிமன்ற விசாரணை கூட நடைபெற்று வருகிறது.

உதாரணமாக, 2018 ஜூலை மாதத்தில் சென்னை -சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காக, சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கேரள வெள்ள பாதிப்பில் உதவி செய்வதற்காக, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கேரளா சென்றபோது சீமான் வழிமறித்து கைது செய்யப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் ஏந்திய பேனருடன் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் திடீரென விடுவிக்கப்பட்டார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சீமான் மட்டுமல்ல, அவரது கட்சியினரும் பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கு விசாரணைகளையும் சந்தித்து வருகிறார்கள்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சீமான் பற்றி கூறியுள்ள தகவல் தவறு என தெரியவருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள செய்தி தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியவில்லை: ஃபேஸ்புக் விஷமம்

Fact Check By: Pankaj Iyer 

Result: False