
‘’6 வயதில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த ஸ்ரீதிவ்யா,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்

ஒரே செய்தியை பல பதிவர்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
Facebook Link1 | Archived Link1 |
Facebook Link2 | Archived Link2 |
Facebook Link3 | Archived Link3 |
Facebook Link4 | Archived Link4 |
இவர்கள் அனைவரும் பகிர்ந்துள்ள செய்தி Cine Café என்ற இணையதளத்தில் வெளியானதன் லிங்க் ஆகும்.

Cine Café News Link | Archived Link |
உண்மை அறிவோம்:
இந்த செய்தியின் தலைப்பு மற்றும் புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஸ்ரீதிவ்யா நடித்தது போலவே உள்ளது. இதனையே பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இந்த செய்தியை முழுதாக படிக்கும்போது, செய்தியின் உள்ளே, மகேஷ் பாபு உடன் ஸ்ரீதிவ்யா, தனது 6வது வயதில் நடித்தார் எனக் கூறியுள்ளனர்.

ஆனால், செய்தியின் தலைப்பிலும், கவர் புகைப்படத்திலும் ரஜினியை குறிப்பிட்டுள்ளனர். இதுதான் இந்த செய்தியில் உள்ள குறைபாடாகும்.

இவ்வாறு செய்வதன் மூலமாக, வாசகர்களை குழப்பி, அதிக ஷேர், ரீச் கிடைக்கும் என இந்த செய்தியை வெளியிட்ட இணையதளம் நினைத்துள்ளது. எனவேதான், பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சூப்பர் ஸ்டார் என வார்த்தையில் சொன்னதோடு நிற்காமல் ரஜினியின் கவர் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும், சூப்பர் ஸ்டார் என்றால் தமிழ் சினிமாவை பொறுத்தவரையிலும் ரஜினிதான் எல்லோரின் நினைவுக்கும் உடனே வருவார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த செய்தியின் தலைப்பு மற்றும் கவர் புகைப்படம் தவறு என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தியின் தலைப்பு மற்றும் கவர் புகைப்படம் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சூப்பர் ஸ்டாருடன் இளம் வயதில் நடித்த ஸ்ரீ திவ்யா: ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பும் செய்தி
Fact Check By: Pankaj IyerResult: False Headline
