பாலிவுட்டில் தல அஜித்; அதிர்ச்சியில் இந்திய சினிமா: குழப்பும் செய்தி

சமூக ஊடகம் | Social சினிமா | Cinema

‘’பாலிவுட்டில் தல அஜித், அதிர்ச்சியில் இந்திய சினிமா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\ajith 2.png

Facebook Link I Archived Link

Ajithnewz என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு செய்தி லிங்கை பகிர்ந்துள்ளனர். இது https://www.newstig.net/ என்ற இணையதளம் வெளியிட்டதாகும். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

இந்த செய்தியின் முழு ஸ்கீரின்ஷாட் ஆதாரத்திற்காக, கீழே இணைக்கப்பட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\ajith 3.png

உண்மை அறிவோம்:
மேற்கண்ட இணையதள செய்தியில், அஜித் பற்றியும், போனி கபூர் பற்றியும், நேர்கொண்ட பார்வை படம் பற்றியும் குறிப்பிடுகின்றனர்.

இந்த செய்தியில், அஜித் பற்றி போனி கபூர் பேட்டி அளித்ததாகவும், நேர்கொண்ட பார்வை ரிலீசான பின், அஜித்திற்கு பாலிவுட் பட வாய்ப்புகள் நிறைய வரும் என கூறினார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், அடுத்த வரிகளிலேயே, அஜித்திற்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வருவதாகவும், அவற்றை அஜித் மறுத்துவிட்டு, தனக்கென தனி கொள்கை வைத்து வாழ்ந்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். அதாவது, இவர்களின் சொந்த கருத்தாக உள்ளது. செய்தியின் உள்ளே கூறியுள்ளதன் படி பார்த்தால், அஜித்திற்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தாலும், அவர் அவற்றில் நடிக்க வாய்ப்பில்லை என்று, தெரியவருகிறது.

அதேசமயம், செய்தியின் தலைப்பை பார்த்தால், அஜித் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டதைப் போலவும், அவர் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுவிட்டார் எனவும் தோன்றுகிறது. இது மிக தவறாக, படிப்பவர்களை குழப்புவதாக உள்ளது.

C:\Users\parthiban\Desktop\ajith 4.png

எனவே, மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பாலிவுட்டில் தல அஜித்; அதிர்ச்சியில் இந்திய சினிமா: குழப்பும் செய்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline