
‘’இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த வீடியோவில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் காயமடைந்து இருப்பதைக் காண முடிகிறது. பலர் படுக்கையிலும் உள்ளனர். இந்தியா தாக்கியதில் அவர்கள் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதால், பலர் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் இருப்பவர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தினர்தானா மற்றும் அவர்கள் எப்படி காயமடைந்தார்கள் என்ற விவரம் அறிய, வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம்.
அப்போது, இந்த வீடியோ மிகப் பழையது என்றும், தலிபான்களுடனான மோதலின்போது இதில் உள்ள பாகிஸ்தானிய ராணுவத்தினர் காயமடைந்தனர் என்றும் தெரியவந்தது.
இந்த வீடியோவை மீண்டும் ஒருமுறை கீழே நமது ஆதாரத்திற்காக, எம்பெட் செய்துள்ளோம்.
எனவே, 2011ல் எடுத்த வீடியோவை தற்போது நிகழ்ந்தது போல அதுவும் இந்தியாவுடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் (+91 9049044263) என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
