சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்த பாபா ராம்தேவ்; சிகிச்சை பெறும் படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்ததில் அடிபட்ட பாபா ராம்தேவ் மருத்துவமனையில் சிகிச்சை,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் யோகா குரு பாபா ராம்தேவ், சைக்கிள் பயிற்சி செய்தபோது, கீழே விழுந்து அடிப்பட்டதாக தகவல் பரவியது. இதையொட்டி, வீடியோ ஒன்றும் பலரால் பகிரப்பட்டது.

இந்த சைக்கிளில் விழுந்த நிகழ்வை தொடர்ந்து, அவருக்கு பலத்த அடிபட்டுவிட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார், என்று கூறி பலரும் மேற்கண்ட புகைப்படத்தை பகிர தொடங்கியுள்ளனர்.

உண்மையில், இந்த புகைப்படத்திற்கும், பாபா ராம்தேவ் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிகழ்விற்கும் எந்த தொடர்பும் இல்லை. சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததாகச் செய்திகள் வெளியானபோதும், அதனால் அவர் காயமடைந்தார் என்ற செய்தி எதுவும் காணக் கிடைக்கவில்லை. 

Freepressjournal News Link Archived Link

அதேசமயம், இவர்கள் குறிப்பிடும் புகைப்படம் கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 9 நாட்கள் போராடிய நிலையில், உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அவரது உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

இதையொட்டி, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எடுத்த புகைப்படம்தான் மேலே உள்ள ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை நீங்கள் கூகுள் சென்று Baba Ramdev fasting என்ற கீவேர்ட் பயன்படுத்தி தேடிப் பார்க்கலாம். 

எனவே, ‘’பாபா ராம்தேவின் பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போதைய சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிகழ்வுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர்,’’ என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்த பாபா ராம்தேவ்; சிகிச்சை பெறும் படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False