இந்த வீடியோ டெல்லி அசோக் நகரில் எடுக்கப்பட்டதா, இல்லையா?

அரசியல் | Politics இந்தியா | India

டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களின் நீட்சியாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுவதை காண நேரிட்டது. அந்த வீடியோ டெல்லி அசோக் நகரில் எடுக்கப்பட்டதாக பலரும் கூற, ஒரு சிலர் அது அங்கே எடுக்கப்பட்டதல்ல என்று மறுப்பு தெரிவிப்பதையும் கண்டோம். இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் ஏற்கனவே ஒருவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவை எடுத்து, அதில் கூறியுள்ளது உண்மைதான் எனக் கூறி பகிர்ந்துள்ளனர். இதன்படி, டெல்லியில் மசூதி எதுவும் சமீபத்தில் தாக்கப்பட்டதா என தகவல் தேடினோம். அப்போது இதுபற்றிய சில விவரம் கிடைத்தது. 

முதலில் இந்த வீடியோ டெல்லி அசோக் விஹாரில் நடைபெற்ற ஒன்று எனக் கூறி @RanaAyyub என்பவர் தகவல் பகிர்ந்ததால், இதுபற்றி டெல்லி போலீசாரும், ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் மறுப்பு கூறியதாக தெரியவந்தது. 

Archived Link

இதன்பிறகும் @RanaAyyub இந்த வீடியோ பற்றிய உண்மைகளை சரிபார்த்துவிட்டு, இது டெல்லியில் நடந்ததுதான், ஆனால் எந்த இடம் என்று சரியாக தெரியவில்லை எனக் கூறி மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்ததை காண நேரிட்டது. 

Archived Link

எனவே, இது டெல்லி அசோக் விஹார் பகுதியில் நடந்தது இல்லை என்று தெளிவாகிறது. ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளதைப் போல இது டெல்லியில் இல்லாமல் பீகாரில் நிகழ்ந்த சம்பவமா என விவரம் தேட தொடங்கினோம்.

அப்போது, இதுபற்றிய செய்தி விவரங்கள் கிடைத்தன. இந்த வீடியோ டெல்லி அசோக் விஹாரில் எடுக்கப்பட்டது கிடையாது என்பது உண்மைதான். அதற்காக, இது டெல்லியிலேயே நடைபெறவில்லை என்று கூற முடியாது. இது டெல்லி அசோக் நகரில் நிகழ்ந்ததாகும்.

இதனை நேரில் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார். அதனை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

இந்த மசூதி தாக்கப்படும் காட்சியில் ஒன்றை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். ஆனால், அனைத்துமே சமீபத்திய முடிவுகளாகக் கிடைத்தன. எதுவுமே பீகார் மாநிலம், சமஸ்டிபூரில் நிகழ்ந்ததாகக் கூறவில்லை. 

இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட அசோக் நகர் மசூதி கலவரக்காரர்களால் தாக்கப்படுவதை மற்றொரு கோணத்தில் சற்று தொலைவில் இருந்து வேறொருவர் வீடியோவாக படம்பிடித்துள்ளார். அதனை யூ டியூப்பில் பகிர்ந்துள்ளார். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

மேலும், அந்த மசூதியை சிலர் தீயிட்டு எரித்த பின் எடுக்கப்பட்ட காட்சிகளை, The Wire ஊடகம் பகிர்ந்துள்ளது. 

இதன்படி, அது டெல்லியின் வடகிழக்கே அசோக் நகரில் உள்ள Badi Masjid என தெளிவாகிறது. 

இதுபற்றி பல்வேறு ஊடகங்களும் உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை சமர்ப்பித்துள்ளனர். அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

The Print LinkArchived Link
Altnews Link Archived Link 
TheWire.in LinkArchived Link 
TheQuint Link Archived Link 

இறுதியாக, பீகார் மாநிலம் சமஸ்டிபூரில் ஏதேனும் மசூதி தாக்கப்பட்டதா என விவரம் தேடினோம். அப்போது ஒரு செய்தியை படிக்க நேரிட்டது (இங்கே கிளிக் செய்யவும்). அதனை வைத்துப் பார்த்தால் சமஸ்டிபூரில் தாக்கப்பட்ட மசூதி வேறு, டெல்லி அசோக் நகரில் தாக்கப்பட்ட மசூதி வேறு என்று தெளிவாகிறது. இரண்டையும் ஒப்பிட்டு கீழே இமேஜ் கம்பேரிசன் தந்துள்ளோம்.

இதன்பேரில் சம்பந்தப்பட்ட சமஸ்டிபூர் சப் டிவிஷனல் ஆபிசர் அமன் குமார் சுமனை நமது இந்தி பிரிவினர் தொடர்புகொண்டு விசாரித்தனர். மேலே உள்ள சர்ச்சைக்குரிய மசூதி வீடியோவை பார்வையிட்ட அவர், ’’இது சமஸ்டிபூரில் நடைபெறவில்லை. இந்த மசூதி வேறு ஒன்றாக உள்ளது,’’ என்றார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மசூதியை சிலர் தாக்கி, தீயிட்டு கொளுத்தும் மேற்கண்ட வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டதுதான். அது அசோக் விஹாரில் நடைபெற்றது எனக் கூறி முதலில் சிலர் தகவல் பகிர்ந்துள்ளனர். இதனை போலீசார் மறுத்துள்ளனர்.
2) ஆனால், அது அசோக் விஹார் அல்ல, டெல்லி அசோக் நகரில் நடைபெற்றதாகும். அதற்கான வீடியோ, நேரில் பார்த்த சாட்சி, கூகுள் மேப் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், அசோக் நகரில் உள்ள Badi Masjid தாக்கப்பட்டபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.
3) பீகார் மாநிலம், சமஸ்டிபூரில் தாக்கப்பட்ட மசூதி வேறொன்றாகும். அதன் புகைப்படம், தொடர்புடைய செய்தி ஆதாரங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் அதிகாரியின் பேட்டி ஆகியவை நமக்கு கிடைத்துள்ளன.
4) நம்மைப் போலவே நிறைய ஊடகங்கள் இந்த மசூதி தாக்குதல் பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை சமர்ப்பித்துள்ளன.
5) சரியான தகவலுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ செய்தியை குழப்பும் நோக்கில் இது டெல்லியில் எடுக்கப்பட்டது அல்ல, பீகாரில் எடுக்கப்பட்டது என்று சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் வதந்தி பரப்புகின்றனர். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்து குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்த வீடியோ டெல்லி அசோக் நகரில் எடுக்கப்பட்டதா, இல்லையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False