விஜயேந்திர சரஸ்வதி அசைவம் சாப்பிடுவோரை விமர்சித்தாரா? நியூஸ் 7 பெயரில் வதந்தி

அரசியல் தமிழகம்

‘’அசைவம் சாப்பிடுவோர் இந்துக்கள் அல்ல,’’ என்று விஜயேந்திர சரஸ்வதி விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
விஜயேந்திரர் சமீபத்தில் எங்கேனும் இவ்வாறு சொன்னாரா என்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. விஜயேந்திரர் பற்றி கடைசியாக செய்தி வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டதாக தெரிகிறது.

இருந்தாலும் பிப்ரவரி 27, 2020 அன்று தினமலர் வெளியிட்ட செய்தி விவரம் கிடைத்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆனால், இது பிப்ரவரி 27ம் தேதி வெளியாகியுள்ளது, நாம் ஆய்வு செய்யும் பதிவோ பிப்ரவரி 25, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதது என்று தெளிவாகிறது.

இதற்கடுத்தப்படியாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்ட நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். அது நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரில் இருந்தாலும், அதில் உள்ள தேதி, நேரம், ஃபாண்ட் உள்ளிட்டவை அரத பழசாக, ரொம்ப தேய்ந்து போய் இருந்தன. இதில் இருந்தே வேறொரு செய்தியை எடுத்து, ஈயம் பூசி புதியதுபோல பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. 

இந்த நியூஸ் கார்டை fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் இது போலிதான் என்று உறுதியானது.

இறுதியாக, சம்பந்தப்பட்ட நியூஸ்7 தொலைக்காட்சியின் ஆன்லைன் பிரிவு நிர்வாகியிடம் இதுபற்றி நமது குழுவினர் தொடர்புகொண்டு பேசினர். அப்போது, ‘’இது நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டு அல்ல. எங்களது பழைய செய்தியை எடிட் செய்து இவ்வாறு பரப்பியுள்ளனர்,’’ என மறுத்துவிட்டனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:விஜயேந்திர சரஸ்வதி அசைவம் சாப்பிடுவோரை விமர்சித்தாரா? நியூஸ் 7 பெயரில் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •