இந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அறிமுகம் செய்த டிரம்ப்- ஃபேஸ்புக் வதந்தி

சமூகம் சர்வ தேசம்

இந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Trump 2.png
Facebook Link 1Archived Link 1Facebook Link 2Archived Link 2

அமெரிக்க அதிபர் டிரம்ப் கையில் ஒரு டி-ஷர்ட் வைத்துள்ளார். அதில், “இந்தியா நீட்ஸ் ஜீசஸ் ஆமென்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. 

கிறிஸ்தவ செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவு டிசம்பர் 11, 2019 அன்று ஷேர் செய்யப்பட்டு இருந்தது. உண்மையில் இந்த பதிவை Edicheria Daniel என்பவர் டிசம்பர் 8, 2019 அன்று பதிவிட்டுள்ளார். இதை ஆயிரக் கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதம் தொடர்பான ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. படத்தில் உள்ளது போன்று “இந்தியாவுக்கு இயேசு தேவை” என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை டிரம்ப் வைத்திருந்தாரா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.

நன்கு உற்றுப் பார்த்தபோது இந்தியா என்ற வார்த்தை மட்டும் சேர்க்கப்பட்டிருப்பது போல தெரிந்தது. உண்மையில் கிறிஸ்தவம் பற்றி ஏதேனும் டிரம்ப் கூறினாரா என்று ஆய்வு செய்தோம்.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இதே போன்று பல படங்கள் நமக்கு கிடைத்தன. அதில், “அமெரிக்காவின் அதிபராக யார் இருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டு இல்லை… இயேசுவே எப்போதும் அரசர்” என்று பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்டை டிரம்ப் வைத்திருப்பது போன்று பல பதிவுகள் கிடைத்தன. தொடர்ந்து தேடிய போது டிரம்ப்பின் இன்ஸ்டாகிராம் படம், ஈ.எஸ்.பி.என் செய்தி, இது எடிட் செய்யப்பட்ட படம் என்று வெளியான சில கட்டுரைகளும் கிடைத்தன.

Trump 3.png
Search Link 1Search Link 2

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்தோம். முதலில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான படத்தைப் பார்த்தோம். அது டிரம்பின் அதிகாரப்பூர்வ பக்கம் என்று தெரிந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போல, “இந்தியாவுக்கு இயேசு தேவை” என்ற வாசகமோ, “அமெரிக்க அதிபராக யார் இருக்கிறார்கள் என்பது பொருட்டில்லை, இயேசுவே எப்போதும் அரசர்” என்ற வாசகமோ இல்லை. டிரம்ப் 45 என்று மட்டுமே இருந்தது. அந்த படத்தில் ஃபிஃபா உலக கோப்பை என்று ஹேஷ்டேக் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. வேறு எந்த விவரமும் இல்லை. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இந்த படம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. 

Archived Link

எதற்காக இந்த சந்திப்பு என்று தேடிய போது, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடர்பாக ஃபிஃபா அமைப்பின் தலைவர், அமெரிக்க கால்பந்து அமைப்பின் தலைவர் ஆகியோர் ஓவல் அரங்கில் வைத்து டிரம்பை சந்தித்தார்கள் என்று ஈ.எஸ்.பி.என் வெளியிட்ட செய்தியும் நமக்கு கிடைத்தது. ஈஸ்பிஎன் இந்த செய்தியை 29 ஆகஸ்ட் 2018 அன்று வெளியிட்டிருந்தது. அதாவது, டிரம்ப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதற்கு அடுத்த நாள் இந்த செய்தியை ஈஎஸ்பிஎன் வெளியிட்டிருந்தது.

Trump 4.png
espn.inArchived Link

வீடியோ ஏதாவது கிடைக்கிறதா என்று யூடியூபில் தேடினோம். அப்போது ஃபிஃபா தலைவரை சந்தித்தது தொடர்பான வீடியோ கிடைத்தது. 4.34வது நிமிடம் வெள்ளை நிற டி-ஷர்ட்டை அவர் பார்க்கும் காட்சி வரும்.

Archived Link

கால்பந்து போட்டி தொடர்பான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படத்தை எடிட் செய்து, இந்தியாவுக்கு இயேசு தேவை என்று டிரம்ப் கூறுவது போன்ற பதிவை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், மேற்கண்ட பதிவில் உள்ள படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அறிமுகம் செய்த டிரம்ப்- ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False