
‘’திமுகவினர் பேனர் வைத்தால் கட்சியில் இருந்து விலகுவேன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Shankar A என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், தந்தி டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உதயநிதி புகைப்படத்துடன், ‘’இனி திமுகவினர் பேனர் வைத்தால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன்,’’ என்று உதயநிதி சொன்னதாகக் கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக நிர்வாகி ஒருவர் குடும்ப நிகழ்வுக்காக வைத்திருந்த வரவேற்பு பேனர் விழுந்ததால், சாலையில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Indian Express Tamil News Link | Click Here |
இச்சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்களும், தங்களது கட்சி நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு இடையூறு தரக்கூடிய வகையிலான பேனர், பதாகைகள் எதுவும் வைக்கப்படாது என உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டு, வாசகர்களின் கவனத்தை திசைதிருப்பி வருகிறது. இது உண்மையா என நீண்ட நேரம் கூகுள் உள்பட அனைத்திலும் தகவல் தேடினோம். ஆனால், ஒரு செய்தி கூட கிடைக்கவில்லை. இதற்கிடையே, இதில் கூறியிருப்பது தவறான தகவல் என, தந்தி டிவியில் பணிபுரியும் நபரே கமெண்ட் பகிர்ந்துள்ளார்.
நீண்ட தேடுதலுக்குப் பின், தந்தி டிவி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாக வெளியிட்ட மறுப்பு செய்தி விவரம் கிடைத்தது. தங்களது பெயரில் போலி செய்தி பரப்பப்படுவதாக, அதில் கூறப்பட்டிருந்தது.

Facebook Link | Archived Link |
இதேபோல, திமுக ஆதரவு பத்திரிகையாளரான மற்றொருவர் இதனை போலியான செய்தி எனக் கூறி, விளக்கம் அளித்துள்ளார்.
Facebook Link | Archived Link |
இதையடுத்து fotoforensics.com இணையதளத்தில் இதனை பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது, இது மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்றுதான் என தெளிவாக தெரியவந்தது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பேனர் வைத்தால் திமுகவில் இருந்து விலகுவேன்: உதயநிதி பெயரில் பரவும் போலி செய்தி
Fact Check By: Pankaj IyerResult: False
