
‘’மோடியை கிண்டல் செய்து டைம் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவை மே 26ம் தேதி Sivasuriya என்பவர் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைக்க உள்ளார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதே கார்ட்டூனை வைத்து, ராகுல் காந்தியை தவறாக சித்தரித்து ஒரு பதிவை சிலர் பகிர்ந்திருந்தனர். அதுபற்றி நாமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருந்தோம். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, மோடியை கிண்டல் செய்து பகிரப்படும் குறிப்பிட்ட கார்ட்டூன் கடந்த சில ஆண்டுகளாகவே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகும். இதுதொடர்பாக, 2017ம் ஆண்டே Daily Post ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டு, இது போலியான கார்ட்டூன் என நிரூபித்துள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். உண்மையில், டைம் ஊடகம் வெளியிட்ட கார்ட்டூன் இது கிடையாது.
கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க அரசியல் நிலவரத்தை கேலி செய்து, முதன்முதலாக, டைம் பத்திரிகை ஒரு கார்ட்டூனை வெளியிட்டது. அந்த கார்ட்டூன் பற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேற்கண்ட கார்ட்டூனை எடுத்து, மோடியின் உருவத்தை வைத்து, தவறாகச் சித்தரித்து பகிர்ந்து வருகின்றனர். உண்மையாக டைம் பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன், 2012ல் வெளியிடப்பட்டதாகும். மேலும் மோடியை பற்றிய மேற்கண்ட கார்ட்டூன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டைம் பத்திரிகை மோடியை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டதா?
Fact Check By: Parthiban SResult: False
