அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்ததாக பரவும் வதந்தி!
‘’அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டனர்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், Sugentech - SGT1 – flex COVID 19 IgM/IgG என்ற பெயரிட்ட ஒரு மருந்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால், அது கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசியா என்று தெரியவில்லை. இருந்தாலும் இது உண்மை என நம்பி பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதைப் போல கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதா என்று விவரம் தேடினோம். அந்த கீவேர்ட் பயன்படுத்தி தகவல் தேடியபோது, இது தடுப்பூசி இல்லை, கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தக்கூடிய டெஸ்ட் கிட் என்ற விவரம் தெரியவந்தது.
இதன்படி, தென்கொரியாவை சேர்ந்த Sugentech என்ற மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்து விநியோகித்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் கோவிட் 19 வைரஸ் பரிசோதனைக்காக புதிய டெஸ்ட் கிட் தயாரித்துள்ளனர். அதுதான் நாம் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கண்ட புகைப்படம்.
Sugentech Link | Archived Link |
மேற்கண்ட Sugentech தயாரிப்பு விவரத்திலேயே, ‘’கொரோனாவைரஸ்க்கு இன்னமும் மருந்து, தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, ஓய்வில் இருப்பது அவசியம். அப்படியான வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க எங்களது டெஸ்ட் கிட் உபயோகப்படும்,’’ என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதை காண முடிகிறது.
எனவே, கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அது உலக அளவில் பேசப்படும் விசயமாக மாறியிருக்கும். இதுவரை அப்படி எந்த தகவலும் வெளியாகவில்லை. வெறும் டெஸ்ட் கிட்டின் புகைப்படத்தை வைத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக, வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்ததாக பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False