ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்!

அரசியல் சமூக ஊடகம்

தரங்கம்பாடி அருகே நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுவரை 12 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

மே 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், பொக்லைன் இயந்திரங்கள் ஒரு நெல்வயலில் இறங்கி, சேதம் செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேலே, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக, தரங்கம்பாடி அருகே நடவு நட்ட வயல்களில் கெயில் நிறுவனம் குழாய்கள் பதிப்பு, என்று எழுதியுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால், பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் இருப்பது உண்மைதானா, என்ற கோணத்தில், கூகுளில் தகவல் தேடினோம். அப்போது, இது உண்மைதான் என உறுதி செய்யும் வகையில் எடுத்த எடுப்பிலேயே சில செய்தி ஆதாரங்களும், புகைப்படத்தில் வரும் பொக்லைன் இயந்திரங்கள் பற்றி வீடியோ ஆதாரமும் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\gail 2.png

மத்திய அரசின் அனுமதியுடன், தரங்கம்பாடி அருகே மாதானம் முதல் மேமாத்துர் வரை 29 கிலோமீட்டர் நீளத்திற்கு, கெயில் நிறுவனம், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக, குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, இந்த பணிகள் நடைபெற்று வருவதாக, செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தினகரன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, மின்னம்பலம் இணையதளம் வெளியிட்ட விரிவான செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் நடந்தபோது, எடுக்கப்பட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம், சினிமா இயக்குனர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததாகும். அந்த பதிவு இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட புகைப்படம் உண்மையானதுதான் என்றும், அச்சம்பவம் மே 16ம் தேதி நிகழ்ந்துள்ளது என்றும் தெரியவருகிறது.    

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு உண்மையான ஒன்றுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில், வேறெந்த கலப்பட தகவலும் இல்லை. இது மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால், பலராலும் வைரலாக ஷேர் செய்யப்படுவதாக, உணர முடிகிறது.

Avatar

Title:ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நடவு நட்ட வயல்களில் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம்!

Fact Check By: Parthiban S 

Result: True

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •