மேற்கு வங்கத்தில் மகளை திருமணம் செய்துகொண்ட முஸ்லீம் நபர்: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

சமூக ஊடகம்

‘’மேற்கு வங்கத்தில் மனைவியை சாட்சியாக வைத்து பெற்ற மகளை திருமணம் செய்துகொண்ட அப்பாஸூதின் அலி,’’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\muslim man 2.png

Facebook Link I Archived Link

Adhiseshan என்பவர், கடந்த ஜூன் 28, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், முஸ்லீம் ஆண், பெற்ற மகளை திருமணம் செய்துகொண்டதாகக்கூறி ஒரு செய்தித்தாளில் வெளிவந்த செய்தியையும், இளம்பெண் ஒருவருக்கு முஸ்லீம் மதகுரு போன்று உள்ள நபர் முத்தம் தரும் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’மேற்கு வங்கத்தில் மனைவியை சாட்சியாக வைத்து பெற்ற மகளையே திருமணம் செய்து கற்பமாக்கிய அப்பாஸுதீன் அலி. கேட்டால் அல்லா ஒப்புதல் கொடுத்தாராம். என்ன கொடுமை இது ????,’’ என்று எழுதியுள்ளார்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியை உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்துவரும் பலருக்கும் ஒரு விசயம் தெரியவில்லை போலும். ஆம், இதில் இடம்பெற்றுள்ள புகைப்படத்திற்கும், அதில் உள்ள நியூஸ்பேப்பர் கட்டிங்கிற்கும் வித்தியாசம் உள்ளதை பலரும் அறியாமல் உள்ளது வியப்பாக உள்ளது.

C:\Users\parthiban\Desktop\muslim man 3.png

அதாவது, மேற்கண்ட செய்தி வேறு, இந்த புகைப்படம் வேறு, இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. குறிப்பிட்ட நியூஸ்பேப்பர் கட்டிங்கில் இருக்கும் செய்திதான் உண்மையானது. அது, கடந்த நவம்பர் 20, 2007 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்ட செய்தியாகும். இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\muslim man 4.png

இதேபோல, இவர்கள் குறிப்பிட்டுள்ள மற்றொரு புகைப்படம், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக பரவி வரும் வீடியோ ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அதற்கும், இந்த செய்திக்கும் தொடர்பில்லை.

இதே வீடியோ உருது மொழியிலும் பரவி வருகிறது. அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

அதாவது, இந்த புகைப்படத்தில் இருக்கும் முஸ்லீம் ஆண், பெண் இருவரும் குறிப்பிட்ட செய்தியில் இருப்பவர்கள் இல்லை. இரண்டும் வெவ்வெறு சம்பவங்கள் ஆகும்.

வெவ்வேறு சம்பவங்களை ஒன்றாக இணைத்து ஒரே நபர்தான் எனக் கூறி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளனர். இதில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மேற்கு வங்கத்தில் மகளை திருமணம் செய்துகொண்ட முஸ்லீம் நபர்: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture