கொரோனா வைரஸ்: மசூதி சென்று வழிபட்டாரா சீன அதிபர் ஜீ ஜின்பிங்?

Coronavirus அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News

‘’கொரோனா வைரஸ் பாதிப்பால் மசூதி சென்று வழிபட்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

Irfan Ullah எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பிப்ரவரி 5, 2020 அன்று பகிர்ந்துள்ளது. இதில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மசூதி ஒன்றுக்குச் சென்று, முஸ்லீம் சமூகத்தினருடன் பேசுகிறார். பிறகு வெளியில் வருகிறார். இதனை பகிர்ந்து, சீன அதிபர் மசூதியில் வழிபட்டதுபோலவும், தற்போதைய கொரோனா வைரஸ் நிகழ்வுடன் இதற்கு தொடர்பு உள்ளதுபோலவும் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உள்ளது.

உண்மை அறிவோம்:
சீனாவை தற்போது கொரோனா வைரஸ் உலுக்கியெடுத்து வருகிறது. இதையொட்டி நாள்தோறும் புதுப்புது வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவுவது வாடிக்கையாக உள்ளது.

அதையொட்டி சீன பிரதமர் மசூதியில் சென்று வழிபட்டார் என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் சில நாள் முன்பாக பரவியது. ஆனால், அது தவறான தகவல் என்று ஏற்கனவே நாம் உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டிருந்தோம்.

Fact Crescendo Tamil Story Link

இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறியுள்ளதுபோல, சீன அதிபர் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றும்படி மசூதி எங்கேயும் சென்று துவா செய்ய கோரவில்லை. இந்த வீடியோ 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். அதற்கும், தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

இதன்படி, 2016ம் ஆண்டு சீனாவின் வடமேற்கே உள்ள நிங்ஸியா ஹூய் தன்னாட்சி பிராந்தியத்தில் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதோர் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் அங்கே உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது யின்சுவான் நகரில் உள்ள மசூதி ஒன்றுக்குச் சென்று, அங்கிருந்த இமாம்களிடம் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உதவும்படி கோரினார். அந்த வீடியோவை தற்போது பகிர்ந்து, கொரோனாவைரஸ் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர். 

இதுதொடர்பாக நமது இலங்கை பிரிவினர் கூட ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து, இது தவறு என்று நிரூபித்துள்ளனர். அதன் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Fact Crescendo Sri Lanka Story Link

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, பழைய வீடியோவை தற்போது பகிர்ந்து, கொரோனாவைரஸ் பாதிப்புடன் இணைத்து வதந்தி பரப்பியுள்ளனர் என்பதை நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனா வைரஸ்: மசூதி சென்று வழிபட்டாரா சீன அதிபர் ஜீ ஜின்பிங்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False