தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்வில் சீமான் பங்கேற்கவில்லையா?

அரசியல் தமிழகம்

‘’தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நாளன்று சீமான் வரவில்லை,’’ எனும் தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய் தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Chandresh Kumar Yadav

என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இதில், எச்.ராஜாவின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ தமிழில் தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று போராடிய #சுடலையும் வரவில்லை, தமிழ்தேசிய அதிபர் #சீமாண்டியும் வரவில்லை..இதுதான் இவர்களின் தமிழ்ப்பற்றும், கடவுள்ப்பற்றும் 😏😏 ஆன்மீகத்தை நேசிக்கும் #H_ராஜா_ஜி மட்டுமே கலந்து கொண்டார்..🙏🙏,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக, கடந்த பிப்ரவரி 5, 2020 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் நேரில் பங்கேற்றனர். தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மொழிகளில் குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறியுள்ளதில், பாதி உண்மைதான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

அதேசமயம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடமுழுக்கு நாளன்று மாலையில் பெரிய கோயிலுக்கு நேரில் சென்று, பெருவுடையாரை வழிபட்டார். அதுதொடர்பான செய்தியை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன.

Maalaimalar News Link Sathiyam TV News Link 

இதன்படி, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்வில், எச்.ராஜா, காலை முதலே பங்கேற்றிருந்தார். ஆனால், சீமான் உள்ளிட்ட சில பிரபலங்கள் குடமுழுக்கு நாளன்று பிற்பகலில் பங்கேற்று, பெருவுடையாரை தரிசனம் செய்தனர்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், உண்மையும், பொய்யும் கலந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்வில் சீமான் பங்கேற்கவில்லையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •