கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு திமுக உதவும் என்று மு.க.ஸ்டாலின் கூறவில்லை!

அரசியல் | Politics தமிழ்நாடு | Tamilnadu

‘’கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு திமுக உதவி செய்யும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன், நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு ‘திமுக தேவையான சட்ட உதவிகளை வழங்கும்,’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல், தமிழ்க் கடவுள் முருகனை போற்றி பாடப்படும் கந்தசஷ்டி கவசம் பற்றி ஆபாசமாக வர்ணித்ததாகக் கூறி பல தரப்பிலும் விமர்சிக்கப்படுகிறது. இதன்பேரில், அந்த யூடியுப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். மேலும், இதுபற்றி பலவிதமான வதந்திகளும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

Fact Crescendo Tamil Link

இந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள புதிய தலைமுறை பெயரிலான நியூஸ் கார்டு உண்மையானதா என்று பார்த்தால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம், அதனை எடிட் செய்தவர்கள் ஃபான்ட் மற்றும் சில தொழில்நுட்ப தவறுகளை செய்துள்ளனர் என்று சற்று கவனித்துப் பார்த்தாலே எளிதாக விளங்கும். 

உண்மையில், மு.க.ஸ்டாலின் பற்றி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு வேறொன்றாகும். அதனை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

Puthiyathalaimurai News LinkArchived Link

எனவே, புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து, தங்களுக்கு ஏற்ப தவறான தகவலை சேர்த்து உண்மை போல வெளியிட்டு, ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு திமுக உதவும் என்று மு.க.ஸ்டாலின் கூறவில்லை!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

2 thoughts on “கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு திமுக உதவும் என்று மு.க.ஸ்டாலின் கூறவில்லை!

  1. அது என்ன திமுக ஸ்டாலினுக்குன உடனே அந்த செய்தியை ஆராய்விங்க.மத்த தலைவர் மோடி எடப்பாடி இவங்கள பற்றி தவறான செய்தி பகிரப்பட்டால் சும்மா இருப்பது.சரி திமுக உதவியில்லாமல் கருப்பர் கூட்டம் நாய் எப்படி ஈ பாஸ் இல்லாமல் புதுசேரி சென்றான்.கருப்பர் கூட்டம் நடப்பது முழுக்க முழுக்க திமுக தான்

  2. கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வக்கீல் படை களம் எடுக்கப்பட்டுள்ளது என்பது நீங்கள் அறிந்திருக்காத ஒன்றுமில்லை . உங்கள் ஃபெக்ட்செக்கிங் டீம் இதையும் மறுத்தால் fact chek செய்ய வேண்டியது உங்கள் மனச்சாட்சியை தான்

Comments are closed.