Fact Check: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!
‘’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓட்டு கேட்டு சென்றபோது இளைஞர்கள் கேலி கிண்டல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) டிப்லைன் வழியே அனுப்பி, நம்மிடம் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும் கேட்டுக் கொண்டார்.
புதிய தலைமுறை லோகோவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், சீமான் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, இளைஞர்கள் அவரை, நடிகை விஜயலட்சுமியுடன் தொடர்புபடுத்தி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பி யாரேனும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளனரா என தகவல் தேடியபோது, பலரும் ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
Screenshot: Various FB posts with same caption
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
Facebook Claim Link 4 | Archived Link 4 |
உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி நடிகை விஜயலட்சுமி பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இதன்காரணமாக, அவருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே அவ்வப்போது சமூக வலைதளங்கள் வாயிலாக, வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதையொட்டி, மேற்கண்டவாறு நியூஸ் கார்டு சீமான் பற்றி பகிரப்பட்டு வருகிறது.
எனவே, குறிப்பிட்ட நியூஸ் கார்டை நாம் மீண்டும் ஒருமுறை கவனமாக பார்வையிட்டோம். அதில் உள்ள ஃபாண்ட் மற்றும் புதிய தலைமுறை தவிர்த்து, இடது புறம் மேலே உள்ள ஒரு பெயர் போன்றவையும், இதில் கூறப்பட்டுள்ள வாசகமும் இது புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு இல்லை என்பதை உறுதி செய்தன.
புதிய தலைமுறை ஊடகம் டிசம்பர் 21, 2020 அன்று ஏதேனும் சீமான் பற்றி நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதா என்று, அவர்களின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் (@PutiyaTalaimuraimagazine) தேடியபோது, அப்படி எதுவும் காண கிடைக்கவில்லை.
இதையடுத்து, புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டோம். குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர், ‘’வழக்கம்போல, எங்களது பெயரில் பகிரப்பட்டு வரும் போலி நியூஸ் கார்டு இது,’’ எனக் குறிப்பிட்டார்.
எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட நியூஸ் கார்டு வேண்டுமென்றே தயாரித்து பகிரப்படும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!
Fact Check By: Pankaj IyerResult: False