பாலியல் தொழிலாளி கூட ஒரு நாளில் ரூ. 5000 விட அதிகமாக சம்பாதிக்கிறார் என்று குருமூர்த்தி கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘பாலியல் தொழிலாளி கூட ஒரு நாளில் ரூ. 5000 விட அதிகமாக சம்பாதிக்கிறார்,’’ என்று குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ரூ.5000 ஒரு பெரிய தொகையே அல்ல
பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு
பார்த்தால் ரூ.5000 என்பது ஒரு பெரிய
தொகையே அல்ல.
ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளில்
இதைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை, என்று தெரியவந்தது.  

மேலும், இந்த பொய் செய்தி பரப்புவோர் மீது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, TN News 24 சார்பாக, ஏற்கனவே போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, Thuglak Editor Gurumurthy உதவியாளர் Shri Venkateshwaran அவரது X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:பாலியல் தொழிலாளி கூட ஒரு நாளில் ரூ. 5000 விட அதிகமாக சம்பாதிக்கிறார் என்று குருமூர்த்தி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply