கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்படும் அதிமுக நிர்வாகி என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்படும் அதிமுக நிர்வாகி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இந்த நியூஸ் கார்டில், ‘’கள்ளக்குறிச்சி விவகாரம் –  8 பேர் தலைமறைவு… கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு; பிரபு மீது 10ʻக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்ற ஊரில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான கூடுதல் செய்தி ஆதாரங்கள் இதோ…

Puthiyathalaimurai Link l Thanthi TV Link l Dinakaran Link 

முதல்கட்டமாக, இந்த சம்பவம் குறித்து, கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42) மற்றும் சகோதரர் தாமோதரன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Dinamani Link 

இந்த சூழலில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக, ‘அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு’ என்று கூறி நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டை சிலர் பகிர்ந்து வருகின்றனர். 

ஆனால், இதனை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை. இதுதொடர்பாக, அவர்களது X வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, முழு உண்மை தெரியாத சூழலில், வேண்டுமென்றே சிலர் மேற்கண்ட வகையில் நியூஸ் 7 தமிழ் பெயரில் வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்படும் அதிமுக நிர்வாகி என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team 

Result: False