FactCheck: இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்?- வதந்தியால் சர்ச்சை…

அரசியல் கோவிட் 19 சமூக ஊடகம்

‘’இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவுகளில், ‘’இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன். பிறப்பால் அவர் ஒரு முஸ்லீம், ஆனால், அதை மறைத்துக் கொண்டு, தனது பெயரை, என்.ராம் என சுருக்கி, மக்களை ஏமாற்றி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக, இந்தியாவிற்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருகிறார்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு ஆதாரமாக, விக்கிப்பீடியா பக்கம் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டையும் இணைத்துள்ளனர். அதில், Noor Ramadin also known as N Ram, என்று எழுதப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையான விக்கிப்பீடியா பக்கம் சென்று, இந்து என்.ராமின் சுய விவரத்தை பார்வையிட்டால், அங்கே பெயர் Narasimhan Ram என்றுதான் உள்ளது.

N Ram Wikipedia Profile Link

எனவே, இந்த பக்கத்தை ஸ்கிரின்ஷாட் எடுத்து, எடிட் செய்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

இதுதவிர, இந்த சர்ச்சை 2019ம் ஆண்டு முதலாக, பரவி வருகிறது. இதற்கான ஆதாரமாக ஒரு ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link 

இந்த சர்ச்சை பரவியதன் பேரில், சிலர் இதன் உண்மைத்தன்மையை குறிப்பிட்டு, பாஜக ஆதரவாளர்கள் இப்படி வேண்டுமென்றே விக்கிப்பீடியா பக்கத்தில் பெயர் திருத்தம் செய்ய முயற்சிப்பதாக, தகவல் பகிர்ந்திருக்கின்றனர். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

Facebook Post Link

எனவே, 2019ம் ஆண்டில் இருந்து இந்து என்.ராமின் பெயரை முஸ்லீம் பெயராக மாற்றும் முயற்சியில் ஒரு தரப்பினர் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்?- வதந்தியால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply