
‘‘விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் ராஜினாமா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
சன் நியூஸ் லோகோ உள்ள இதில், ‘’ திமுகவினர் மூலம் கிடைத்த வெற்றி என் மயி** சமம் காட்டமான பதிலடியுடன் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார் விருதுநகர் பாராளுமன்றத்தில் உறுப்பினர் -மாணிக்கம் தாகூர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Archived Link
இதேபோன்று, பாலிமர் லோகோவுடன் ஒரு நியூஸ் கார்டு பரவுகிறது. அதில்,’’ விருதுநகர் எம்.பி.யும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர் நாளை காலை சபாநாயகர் ஒம்பிர்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல்.! காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், சன் நியூஸ் தரப்பில் கேட்டபோது, ‘’இதுபோன்று எந்த செய்தியும் நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று கூறினர். மேலும், உண்மையான நியூஸ் கார்டின் லிங்க் கொடுத்தனர்.
அடுத்தப்படியாக, பாலிமர் ஊடகம் தரப்பில் கேட்டோம். அவர்களும், இது போலியான நியூஸ் கார்டு, என்று கூறி, உண்மையான நியூஸ் கார்டின் லிங்கை கொடுத்தனர்.

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டுகள் போலியானவை, என்று தெளிவாகிறது.
இறுதியாக, மாணிக்கம் தாகூர் இதுபற்றி மறுப்பு தெரிவித்து, X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனையும் ஆதாரத்திற்காக, இங்கே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டுகள், போலியானவை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் ராஜினாமா என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…
Fact Check By: Pankaj IyerResult: False


