தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட்டதா?

சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

தமிழ்நாடு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆகக் குறைப்பு அமல்..! 05-01-2022 முதல் அரசாணை வெளியீடு” என்று இருந்தது.

இந்த பதிவை பசும்பொன் தாரா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜனவரி 1, 2022 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைப்பு அமல் என்று குறிப்பிட்டுவிட்டு, அரசாணை ஜனவரி 5ம் தேதி வெளியீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு திட்டம் அமலுக்கு வந்து ஐந்து நாட்கள் கழித்து அரசாணை வெளியிடப்படும் என்ற தகவல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழ்நாடு அரசு இப்படி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட்டதாக செய்தியும் இல்லை. 

மேலும் இந்த தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை வழக்கமாக பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் போலவும் இல்லை. பின்னணி டிசைன் இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை தெளிவுபடுத்தின. இருப்பினும் ஆதாரங்கள் அடிப்படையில் இது போலியானது என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தோம்.

புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது 2022 ஜனவரி 2ம் தேதி புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டுடன் மறுப்பு பதிவு வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. அதில், “போலியாக இந்த செய்தியைப் பரப்புகிறார்கள். இது புதிய தலைமுறையில் வெளியான செய்தி அல்ல” என்று குறிப்பிட்டிருந்தனர்.

 மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன் நியூஸ் கார்டு மீது “FAKE NEWS” என்று எழுதியிருந்தனர். இதன் மூலம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை தமிழ்நாடு அரசு குறைத்தது என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply