நடிகர் விஜய் கொரோனா பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினாரா?

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim Link Archived Link

18, நவம்பர் 2020 பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் ரூ. 5 கோடியும், சிபிராஜ் ரூ. 2 கோடியும், கொரோனா பாதித்த நடிகர் தவசிக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதே ஃபேஸ்புக் ஐடி, விஜய் பற்றி மற்றொரு பதிவையும் 18, நவம்பர் 2020 அன்று பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில், நடிகர் விஜய், நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர். அதற்காக, புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் ஒரு லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டையும் ஆதாரத்திற்காக இணைத்துள்ளனர். 

Facebook Claim LinkArchived Link

எனவே, ஒரு பதிவில் ரூ.5 கோடியும், மற்றொரு பதிவில் ரூ. 1 லட்சமும் கொடுத்ததாகச் சொல்கின்றனர். அதேபோல, நடிகர் சிபிராஜ், தவசிக்கு ரூ.2 கோடி கொடுத்ததாகவும் கூறுகின்றனர். இது தவிர, நடிகர் தவசிக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் கூறுவதால், வாசகர்கள் பெரிதும் குழப்பமடைந்துள்ளனர்.

இது நகைச்சுவை என்பதை கடந்து, சற்று விஷமத்தனமாகவும் உள்ளது. அத்துடன், இவர்களது பதிவில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள், சற்று பகீர் அளிப்பதாகவும் உள்ளன. அவற்றையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

உண்மை அறிவோம்:
நடிகர் விஜய் மற்றும் சிபிராஜ் இவ்வளவு பெரிய தொகையை நடிகர் தவசிக்கு வழங்குவதாக, அறிவித்தார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அதை விட மிக முக்கியமாக, நடிகர் தவசிக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை. அவருக்கு குடல் புற்றுநோய். அதற்கான சிகிச்சையில் தற்போது உள்ளார். இதுபற்றி ஊடகங்களில் செய்தி தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார். அவருக்கு பல நடிகர்கள் நிதி உதவி அறிவித்து வருகின்றனர். 

Tamil One India LinkVikatan Link 

 இத்தகைய சூழலில் நடிகர் விஜய், ‘’தவசிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்; ரூ.5 கோடி வழங்கினார்; தவசிக்கு ரூ.300 கோடி வழங்கினார்; தவசியின் மனைவியை தத்தெடுத்துக் கொண்டார்,’’ என்றெல்லாம் பகிரப்படும் செய்தி உண்மையானது இல்லை.

இந்த செய்தி வெளியிடப்படும் 18, நவம்பர் 2020 வரை நடிகர் விஜய், தவசிக்கு நிதி உதவி எதுவும் அளிக்கப்படவில்லை. இதுபற்றி சினிமா வட்டாரங்களில் பேசி தெளிவுபடுத்தியுள்ளோம்.

மேலும், நடிகர் சிபிராஜூம் இப்படி ரூ.2 கோடி நிதி உதவி எதுவும் அளிக்கவில்லை. இதுவும் தவறான தகவல். நடிகர் விஜய் மற்றும் சிபிராஜ் பற்றி Indiaglitz வெளியிட்ட ஒரு செய்தியின் டெம்ப்ளேட் எடுத்து, தவறான தகவலை பகிர்ந்துள்ளனர்.

IndiaGlitz Link

இதற்கடுத்தப்படியாக, நடிகர் விஜய் ரூ.1 லட்சம் அளித்தார் என்று கூறி பகிரப்படும் புதிய தலைமுறை பெயரிலான நியூஸ் கார்டும் தவறான ஒன்றாகும். அது உண்மையில், நடிகர் சிலம்பரசன், தவசிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்த செய்தியாகும். அதனை எடுத்து, எடிட் செய்து பகிர்ந்துள்ளனர். இதுபற்றி புதிய தலைமுறை ஊடகம் தரப்பிலும் கேட்டு உறுதிப்படுத்தியுள்ளோம்.  

Puthiyathalaimurai FB Post Link

எனவே, விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் வேண்டுமென்றே அவர் செய்யாத விசயங்களை செய்ததாகக் கூறி, ஆதாரம் எதுவும் இன்றி போலியான செய்தியை பகிர்ந்து, சமூக வலைதள பயனாளர்களை குழப்பியுள்ளனர்.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:நடிகர் விஜய் கொரோனா பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •