
‘’தமிழ்நாடு பெயரை தக்ஷிண பிரதேசம் என்று மாற்றிய பாஜக,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக கூட்டணிக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்வதற்காக, தமிழ்நாடு வந்துள்ளார். அவரை வரவேற்கும் வகையில், மேற்கண்ட போஸ்டரை பாஜக – தமிழ்நாடு பிரிவு வெளியிட்டுள்ளது.
ஆனால், ‘’தக்ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும்’’ என்று அந்த போஸ்டரில் உள்ளதா எனப் பார்த்தால், இல்லை என்பதே உண்மை.
இதுதொடர்பாக, பாஜக – தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் விசாரித்தபோது, ‘’இது போலியான தகவல். நாங்கள் வெளியிட்ட உண்மையான போஸ்டர் வேறு ஒன்று,’’ எனக் குறிப்பிட்டார். அந்த உண்மையான போஸ்டர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, ‘’தமிழகம் வருகை தரும்’’ என்று அச்சிடப்பட்டுள்ளதை எடிட் செய்து, ‘’தக்ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும்’’ என்று மாற்றி, பலரும் அரசியல் உள்நோக்கத்துடன் ஷேர் செய்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தமிழ்நாடு பெயரை தக்ஷிண பிரதேசம் என்று பாஜக மாற்றி எழுதியதா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
