பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம்

‘’பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு #sunnews

Archived Link

மே 3ம் தேதி இந்த பதிவை, சன் நியூஸ் சேனல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் கல்வி நிறுவனத்தின் ஹாஸ்டலில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, மனோஜ் என்ற மாணவனை சக மாணவர்கள் அடித்து விளையாடியதில், அவர் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அடுத்த நாளே உயிரிழந்துவிட்டார். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர், என்று சன் நியூஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:
சன் நியூஸ் செய்தி உண்மையா எனக் கண்டறியும் நோக்கில் கூகுள் சென்று, தேடிப் பார்த்தோம். அப்போது, இதுபற்றி மேலும் பல செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

C:\Users\parthiban\Desktop\imm student 2.png

ஆனால், இந்த இடத்தில் ஒரு சந்தேகம் தோன்றியது. ஆம். சன் நியூஸ் செய்தியில், மேற்கண்ட சம்பவம், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சஸ் வளாகத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நமக்குக் கிடைத்த செய்தி ஆதாரங்களில், அந்த மாணவர் ஐஎம்எம் கல்வி நிறுவனத்தில் படித்தவர் என்றும், இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் கடந்துவிட்டன என்றும் கூறப்பட்டிருந்தது. இதுபற்றி ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

இதன்காரணமாக, நமது சந்தேகம் மேலும் வலுபெற்றது. இதையடுத்து, கூகுளில் மீண்டும் ஒருமுறை விரிவாக வெவ்வேறு கீவேர்ட் பயன்படுத்தி, தேடிப் பார்த்தோம். அப்போது, மேற்கண்ட வீடியோ பழைய வீடியோ என்றும், இதுபற்றி பல்வேறு மொழிகளிலும் வதந்தி பரவி வருகிறது என்றும் தெரியவந்தது. அத்துடன், இந்த செய்தி தொடர்பாக, நமது போட்டி நிறுவனமான இந்திய டுடே உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, நேற்று அதன் முடிவுகளை வெளியிட்டிருந்ததும் தெரியவந்தது.

C:\Users\parthiban\Desktop\imm student 3.png

இதன்படி, தமிழ், தெலுங்கு மொழிகளில் கடந்த 3 நாளாகப் பரவி வரும் இந்த வீடியோவை உண்மை என நம்பி, கிரிக்கெட் வீரர் ஷேவாக் கூட நேற்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

C:\Users\parthiban\Desktop\iim student 4.png

ஆனால், அவரது ட்விட்டர் பதிவுக்கு, ரகுராஜ் சிங் என்பவர் பதில் அளித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது எனது நண்பன்தான்; அவன் தற்போதும் உயிருடன் உள்ளான் என்று, அவர் கூறியிருக்கிறார்.

C:\Users\parthiban\Desktop\iim student 5.png

இதன்பிறகே, இந்தியா டுடேவுக்கு இந்த விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக, இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனையில் இறங்கி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதாவது, வீரேந்தர் ஷேவாக்கின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த அந்த நபரின் மூலமாக, வீடியோவில் அடிவாங்கும் உண்மையான மாணவனை இந்தியா டுடே கண்டுபிடித்துள்ளது. அந்த மாணவனிடமும் இதுபற்றி விளக்கம் கோரியுள்ளது. அதற்கு, அவர், தன்னைப் பற்றி பரவும் வதந்தியை மறுத்துள்ளார். ‘’நான் தற்போது நலமுடன், உயிரோடு உள்ளேன். என்னை எல்லோரும் இப்படி கேள்வி கேட்பது மிக பதட்டமாக உள்ளது,’’ என்று, அவர் குறிப்பிட்டிருக்கிறார். மாணவனின் அந்தரங்கத்தை பாதுகாக்கும் வகையில், அவரது பெயர் உள்ளிட்ட விவரத்தை இந்தியா டுடே வெளியிடவில்லை. எனினும், ஆதாரப் படம் கீழே தரப்பட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\iim student 6.png

நன்றி: இந்தியா டுடே

இதன்படி பார்த்தால், சன் நியூஸ் கூறியுள்ள செய்தியும் தவறு. இதர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளும் தவறு என்று தெளிவாக தெரியவருகிறது.

இதுபற்றி இந்தியா டுடே வெளியிட்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவை விரிவாகப் படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.  

எவ்வித உறுதியும் செய்யாமல், சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் செய்தியை உண்மை என நம்பி, ஒருசில ஊடகங்களில் ஐஐஎம் மாணவர் என்றும், ஒருசில ஊடகங்களில் ஐஐஎஸ்சி மாணவர் என்றும் மாறி மாறி பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளனர். உண்மையில், அந்த மாணவர் கிர்கிஸ்தான் நாட்டில் படித்து வருகிறார் என்றும், இந்த வீடியோ 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும் இந்தியா டுடேவின் சோதனையில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எனவே, சன் நியூஸ் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிரும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர் உங்கள் மீது புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: False