‘’ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பாஜக எம்.பி.,யின் ஆட்டம். ராஜஸ்தான் ஜலோர் – சிரோஹி பாஜக எம்.பி. தேவ்ஜி படேலின் வளர்ச்சி ஆட்டம் தொடர்கிறது. ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் சிந்தியா ஜார்கண்டில் சென்று கட்சியை வளர்க்க அழுகிறார். ராஜஸ்தான் ஆட்டம் போடுகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் விவரம் தேடினோம். அப்போது, கடந்த 2022ம் ஆண்டு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாகவும், அப்போதே இதுபற்றி தேவ்ஜி படேல் போலீசில் புகார் அளித்ததாகவும் செய்திகள் காண கிடைத்தன.

இதுதவிர, தேவ்ஜி படேல் போன்று தோற்றத்தை எடிட் செய்து, இந்த வீடியோவை பரப்பிய குற்றத்திற்காக, ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டும் உள்ளார்.

amarujala link l navbharattimes link l etvbharat link

இதன்படி, குறிப்பிட்ட வீடியோவில் இருப்பவர் தேவ்ஜி படேல் இல்லை என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது பெயரை களங்கப்படுத்த சிலர் வேண்டுமென்றே இந்த வீடியோவை தயாரித்து பரப்பியுள்ளனர் என்றும், இந்த புகாரில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது. எனவே இந்த வீடியோவை எடுத்து, மீண்டும் தேவ்ஜி படேல் பெயரை குறிப்பிட்டு வதந்தி பரப்புவது சட்டப்படி குற்றம் என்பதால், இதனை நமது வாசகர்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அடுத்தப்படியாக, இந்த வீடியோவில் இருப்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த கண் மருத்துவர் ஒருவர் என்று கூறி, சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன. அவற்றையும் இங்கே இணைத்துள்ளோம்.

archive link 1 l archive link 2

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ராஜஸ்தான் பாஜக எம்.பி., தேவ்ஜி படேல் ஆபாச நடனம் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False