
‘’பாகிஸ்தான் டிவி மூலமாக, காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்ந்த வன்முறைகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட காஷ்மீர் இஸ்லாமியர்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
டிவி நிகழ்ச்சி ஒன்றின் காட்சிகளை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ The Kashmir Files படம் பகைமையை வளர்க்கும்னு உருட்டுபவர்கள் கவனத்திற்கு … இப்படி மனிதத்தையும் தட்டி எழுப்பும் என்பதை சொல்லும் காணொளி .. முக்கியமாக பாக்கிஸ்தான் டிவியில் ஒரு காஷ்மீர் இஸ்லாமியர் பேசிய காணொளி .. “நான் ஒரு காஷ்மீர் இஸ்லாமியன் , என் கண் முன்னே பண்டிட்டுட்டுகள் கொல்லப்படுவதை பார்த்து இருக்கிறேன் .. அவர்கள் காஷ்மீரில் நாம் எழுப்பிய விடுதலை குரலுக்கு எதிராக எதுவும் பேசியது இல்லை , அவர்கள் நமக்கு எதிராக கையில் ஆயுதம் ஏந்தியவர்கள் இல்லை .. நிராயுதபாணிகள் .. அவர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்களை தாக்கியதும் இல்லை . சண்டை என்பது இரு தரப்பும் ஆயுதம் ஏந்தி போராடுவது ..இரு ” பவர்”களிடம் நடப்பது .. இப்படி அப்பாவி மக்களை கொல்வது இல்லை . நம் மதமும் அதனை போதிக்கவில்லை .. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை கொல்வது இல்லை/ ஒரு நாய் இன்னொரு நாயை கொல்வது இல்லை .. ஆனால் ஒரு மனிதன் .. Progressive யூத்தாக இன்றைய தலைமுறைகள் அவர்களுக்கு நடந்த கொடுமையை புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரி பண்டிட்டுகள் நம்மிள் ஒருவர்கள் ,இந்த மண்ணின் மைந்தர்கள் .. அன்று காஷ்மீரில் அரங்கேறிய பண்டிட்டுகளின் கொடுமைகளுக்கு நான் மனதார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ..” #TheKashmirFiles ,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஷ்மீரில் சிறுபான்மையினமாக உள்ள பண்டிட்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் தொகுப்பு என்று கூறி, The Kashmir Files என ஒரு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், காஷ்மீரில் பண்டிட்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் உண்மைதான் என்றும், அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றும் ஒருவர் பாகிஸ்தான் டிவிக்கு பேட்டி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டு, மேற்கண்ட வீடியோ செய்தியை பலரும் பகிர்கின்றனர்.
உண்மையில், இந்த வீடியோவில் பேசுபவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த People’s_Democratic_Front (Secular) கட்சியின் பொதுச் செயலாளர் Javed Beigh ஆவார்.

அவர் ANNNewsKashmir என்ற சேனலுக்கு அளித்த பேட்டிதான் இந்த காட்சிகள். அந்த ஊடகம், காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதனை பாகிஸ்தான் சேனல் என்று கூறுவது தவறாகும்.

இதுபற்றி ஜாவித் தனது ட்விட்டர் பக்கத்திலும் தகவல் பகிர்ந்திருக்கிறார். அந்த ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
இந்த வீடியோவில், அவர் காஷ்மீர் பண்டிட்கள் கிரிஜா, பிராடரி ஆகியோருக்கு நிகழ்ந்த பாதிப்புகள், சங்கரம்போரா பீர்வா படுகொலைகள் பற்றி பேசியுள்ளதாக, மேற்கண்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, காஷ்மீரை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், காஷ்மீரை சேர்ந்த டிவி சேனலுக்கு அளித்த நேர்காணல் நிகழ்ச்சியை எடுத்து, அவர் பாகிஸ்தான் டிவியில் பேசி மன்னிப்பு கேட்டதாகக் குறிப்பிட்டு, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:பாகிஸ்தான் டிவி வழியே பண்டிட்களிடம் மன்னிப்பு கேட்ட காஷ்மீர் இஸ்லாமியர்?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
