தி.மு.க-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

திமுக-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுடன் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனிமொழி திமுகவில் இருந்து விலகல்? திமுகவில் அதிகரித்து வரும் பாலியல் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக கட்சியில் இருந்து கனிமொழி விலகுவதாக தகவல் கசிந்துள்ளது” என்று இருந்தது.

இந்த பதிவை Shekar என்பவர் 2022 மார்ச் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒருவர் ஒரே கட்சியில்தான் தொடர்ந்து இருப்பார் என்று கூற முடியாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கட்சி மாறலாம். தி.மு.க-வில் பாலியல் வன்முறை அதிகரித்துவிட்டதாக கூறி கனிமொழி தி.மு.க-வில் இருந்து விலக உள்ளதாக நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கனிமொழி கட்சி மாறுகிறாரா, தி.மு.க-வில் இருந்து விலக உள்ளாரா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த நியூஸ் கார்டு உண்மையானதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் பயன்படுத்துவது போல இல்லை. வடிவமைப்பிலும் வேறுபாடு இருந்தது. எனவே இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம்.

இது குறித்து நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்ட போது இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்தனர். அந்த பதிவை கீழே இணைத்துள்ளோம்.

இதன் மூலம் கனிமொழி தி.மு.க-வில் இருந்து வெளியேற உள்ளார் என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியாகிறது.

முடிவு:

திமுக-வில் இருந்து கனிமொழி விலகப் போவதாக வெளியான நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தி.மு.க-வில் இருந்து கனிமொழி விலக உள்ளதாக நியூஸ் 7 செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False