‘’இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், தங்களது குழந்தைகளை வளர்க்கும் விதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ குறைந்தது 1000 பேருக்காவது தெரியவேண்டும் நம் இந்து பிள்ளைகளை இப்படிதான் வளர்க்கிறோமா..?

ஆரம்பிக்கிறேன் கொண்டு சேர்ப்பது சங்கிகள் கடமை செய்வீர்கள் என நம்புகிறேன் ஆயிரம் வேண்டும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

அட்டையில் செய்த மாட்டை, குல்லா போட்ட சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து வெட்டி அதனை மற்றவருக்குப் பகிர்ந்தளிப்பது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று தகவல் தேடினோம். எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை. அடுத்தப்படியாக, இந்த வீடியோவில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, நமக்கு ஒரு ஃபேஸ்புக் பதிவின் லிங்க் கிடைத்தது.

Little Caliphs Prestij Teluk Pulai Klang என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜூன் 21, 2024 அன்று மேற்கண்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது.

FB Post Link

இதன்படி, இஸ்லாமிய வழக்கத்தில் உள்ள பக்ரீத் குர்பானி அளிக்கும் முறையை சிறுவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வகையில் மேற்கண்ட வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, தெரியவருகிறது.

இதனை பகிர்ந்துள்ள Little Caliphs Prestij Teluk Pulai Klang என்ற ஃபேஸ்புக் பக்கம், மலேசியாவில் செயல்படும் இஸ்லாமிய மழலையர் பள்ளி ஒன்றுக்குச் சொந்தமானது என்றும் விவரம் கிடைத்தது. அவர்களது அதிகாரப்பூர்வ இணையதள முகவரி இதோ… littlecaliphs.com

எனவே, மலேசியா நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மழலையர் பள்ளி ஒன்று குர்பானி கொடுப்பது பற்றி தமது மாணவர்களுக்கு, கற்றுக் கொடுத்த வீடியோவை எடுத்து, இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தங்களது குழந்தைகளுக்கு வன்முறை போதித்து வளர்ப்பதாகக் குறிப்பிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘முஸ்லீம் குழந்தைகளை வளர்க்கும் விதம்’ என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Misleading