
‘’மாஸ்டர் படம் ஓடிடி முறையில் ரிலீஸ் செய்யப்படுகிறது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த செய்தியை முன்னணி ஊடகங்கள் தொடங்கி தனிநபர் வரையிலும் பலரும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பகிர்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த நவம்பர் 27, 28ம் தேதியன்று இது அதிகபட்சமாக டிரெண்டிங்கில் இருந்தது.


உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ தகவலைப் போல பகிரப்பட்டு வந்ததால், மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் XB Film Creators நவம்பர் 28 அன்று இதுபற்றி மறுப்பு தெரிவித்து, விரிவான அறிக்கை ஒன்றை ஊடகங்களில் வெளியிட்டது.
அதனை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.
இதே தகவலை, மாஸ்டர் படத்திற்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். அந்த லிங்கையும் கீழே இணைத்துள்ளோம்.
இதன்படி, ‘’சமூக வலைதளங்களில் மாஸ்டர் பட ரிலீஸ் பற்றி பலவிதமான தகவல்கள் பகிரப்படுகின்றன. அவர்கள் சொல்வதில் முழு உண்மையில்லை. எங்களது படத்தை ரிலீஸ் செய்வதற்காக ஒரு முன்னணி OTT சேவை நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால், மாஸ்டர் படத்தை திட்டமிட்டபடி தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம். தற்போதைய (கொரோனா) நெருக்கடி காலத்தில் நலிவடைந்துள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், இந்த முடிவை மேற்கொள்கிறோம்,’’ என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
எனவே, தியேட்டரில்தான் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறி மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதால், நாம் ஆய்வு செய்யும் தகவலில் உண்மையில்லை என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில் முழு உண்மை இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரீலிஸ்?- தயாரிப்பாளர் மறுப்பு!
Fact Check By: Pankaj IyerResult: False
