FactCheck: தமிழ்நாடு பெயரை தக்ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்ததா?
‘’தமிழ்நாடு பெயரை தக்ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவோம்- பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
இதேபோல, சிலர் தமிழ்நாட்டின் பெயரை நிச்சல பிரதேசம் என்று பாஜக மாற்றப் போவதாகக் கூறியுள்ளது என்றும் குறிப்பிட்டு ஃபேஸ்புக், ட்விட்டரில் தகவல் பரப்பி வருகின்றனர்.
இதனையும் ஏராளமானோர் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் 2021 பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில், அரசியல் கட்சிகளின் பெயரில் வித விதமான வதந்திகள் பகிர்வதையும் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், தேர்தல் பரபரப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திதான் மேலே நாம் கண்டதும்…
உண்மையில், பாஜக தேர்தல் அறிக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுபற்றி நாம் பாஜக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் பேசி உறுதி செய்துள்ளோம். ‘’தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதாக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை; சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் இப்படியான தகவலை உருவாக்கி, பாஜகவிற்கு எதிராக பரப்பி வருகின்றனர்,’’ என்று அவர் தெரிவித்தார்.
எனவே, நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட தகவல் பரபரப்பிற்காக உருவாக்கப்பட்டு, பகிரப்படும் போலியான செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:தமிழ்நாடு பெயரை தக்ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்ததா?
Fact Check By: Pankaj IyerResult: False