‘’அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட 25,000 ஹோம குண்டம்,’’ என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில் அயோத்தி ராமர் கோயிலில் 25,000 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்று செய்தி ஆதாரம் தேடினோம். ஆனால், இது தவறான தகவல் என்று தெரியவந்தது.

இதேபோன்று ஒரு வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்ததைக் கண்டோம்.

இதன்படி, கடந்த 2023 டிசம்பர் 18 அன்று வாரணாசியில் உள்ள Umaraha என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள Swarved Mahamandir எனும் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

திறப்பு விழாவை முன்னிட்டு, அங்கே 25,000 யாக குண்டங்கள் நிறுவப்பட்டிருந்தன. இது ஒரு சாதனையாகவும் குறிப்பிடப்படுகிறது.

Navjeevan Express Link l class24.study link l pib.gov.in

இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை எடுத்தே அயோத்தி ராமர் கோயில் என்று கூறி சிலர் வதந்தி பரப்புகிறார்கள்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அயோத்தி ராமர் கோயிலில் 25,000 ஹோம குண்டம் நிறுவப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: MISLEADING