பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணை உள்ளே விட மறுத்த ஓட்டல் பணியாளர் ஒரு இந்தியரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்தியர் பணியிடை நீக்கம், ஓட்டலை மூடியது பஹ்ரைன் அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இதே செய்தியை கலைஞர் செய்திகள் ஊடகமும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

Kalaignar Seithigal Link I Archived Link

உண்மை அறிவோம்:
சமீபத்தில் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தபடி, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் உணவருந்த சென்றபோது, ஓட்டல் பணியாளர் அவரை ஹிஜாப் காரணமாக, வெளியே அனுப்பிவிட்டதாக, புகார் எழுந்தது. இதன்பேரில், அந்த பெண்ணின் தோழி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

Hindustan Times Link I Middle East Eye Link

இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்திய பஹ்ரைன் அரசு, அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டது. இதன்பேரில், Lanterns Bahrain என்ற அந்த இந்திய உணவகம், பிறகு விளக்கமும் அளித்திருந்தது.

Lanternsbahrain Instagram Link 

இந்த சூழலில் குறிப்பிட்ட ஓட்டலில், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர தொடங்கியதால், சர்ச்சை எழுந்தது. இதன்பேரில், குறிப்பிட்ட குற்றச்சாட்டை முதலில் ட்விட்டரில் பகிர்ந்த அந்த பெண்ணே, மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். தனது தோழியை தடுத்து நிறுத்தியவர் ஒரு இங்கிலாந்து நாட்டவர், இந்தியர் அல்ல, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

இதன்படி, இந்திய வம்சாவழியை சேர்ந்தவரால் நடத்தப்படும் குறிப்பிட்ட ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்த இங்கிலாந்து நாட்டுக்காரர் இப்படியான தவறை செய்திருப்பதாக, தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணை உள்ளே விட மறுத்த ஓட்டல் பணியாளர் ஒரு இந்தியரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Missing Context