இந்தியர்களைப் போல விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரா கோத்தபய ராஜபக்‌ச?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’இந்தியர்களைப் பார்த்து, விலைவாசியை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அறிவுரை,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

இதனைப் பகிர்ந்துள்ள நபர் @Muthalvant, சென்னையில் IBC Tamil என்ற ஊடகத்தில் பணிபுரிவதாக அவரது சுய விவர பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாசகர்கள் நம்மிடம் விளக்கம் கேட்டனர். இதன்பேரில் நாமும் ஆய்வை தொடங்கினோம்.

உண்மை அறிவோம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதீத விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு போன்றவற்றால், அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்பேரில், ஆளுங்கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பலரும் வாபஸ் பெற தொடங்கியதால், அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது பெரும்பான்மை இழந்துள்ளது.

TOI Link I BBC Link

இந்த சூழலில், விலைவாசி உயர்வை, இந்திய இந்துக்கள் போல பொறுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்ச அறிவுரை கூறியதாக, சமூக வலைதளங்களில் மேற்கண்ட வகையில் தகவல் பரவுவதால், குழப்பம் எழுந்துள்ளது.

இதுபற்றி நாம் தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களது லோகோ பயன்படுத்தி யாரோ இப்படி போலியான செய்தியை உருவாக்கியுள்ளனர்,’’ என்றனர்.

இதற்கடுத்தப்படியாக, நமது இலங்கைப் பிரிவினர் உதவியுடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு, இது போலியான செய்திதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, இந்திய இந்துக்களைப் போல விலைவாசியை நாட்டு நலனுக்காக இலங்கை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கோத்தபய ராஜபக்ச கூறியதாகப் பரவும் செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:இந்தியர்களைப் போல விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரா கோத்தபய ராஜபக்‌ச?

Fact Check By: Pankaj Iyer 

Result: False